
Cinema News
காதல் வந்தல்லோ.. ரிது வர்மா அந்த பிரபல நடிகரை காதலிக்கிறாரா?.. ஜோடி சூப்பரா இருக்கே!..
2020ம் ஆண்டு தேசிங் பெரியசாமி இயக்கி துல்கர் சல்மான் மற்றும் ரித்து வர்மா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து ரித்து வர்மாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்நிலையில், தற்போது ரித்து வர்மா ஒரு நடிகரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரித்து வர்மா ஆரம்ப காலத்தில் சில குறும்படங்களில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான பாட்ஷா, பிரேமா இஷ்க் காதல், நா ரகுமருடு உள்ளிட்ட பல படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ரித்து வர்மா விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு படம் மூலம் பிரமலமானார்.

#image_title
ரித்துவின் நடிப்பு திறமையால் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து அவர் துல்கர் சல்மானுடன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி குவித்தது. மேலும் நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி, புத்தம் புது காலை என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ரித்து வர்மா காதலித்து வருவதாக செய்திகள் பரவியிருந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ் என்பவரை காதலித்து வருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. நடிகர் சிரஞ்சிவின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் உப்பெனா படத்தின் மூலம் கதாநயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கொண்டா போலம், ஆதிகேசவர், ரங்கா ரங்கா வைபவங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். திரைத்துறையில் மீண்டும் ஒரு நட்சத்திர ஜோடியாக ரித்து வர்மா மற்றும் வைஷ்ணவ் தேஜ் இருவரும் இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.