இவங்க எப்பதான் திருந்துவாங்க!...லவ் டுடே பிரதீப்பை திட்டிய கோமாளி பட நடிகை...
ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே ஹிட். அதன்பின் 3 வருடங்கள் காத்திருந்து கதை எழுதி அவரே நடித்து இயக்கியுள்ள திரைப்படம்தான் லவ் டுடே.
இந்த கால இளசுகளின் காதல் வாழ்க்கை, செல்போனால் வரும் பிரச்சனைகள் என ஒரு கதையை உருவாக்கி படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களை கவர்ந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இந்த வருடத்தில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூல் பெற்ற படமாக இப்படம் இருக்கிறது. தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரதீப் இயக்கிய முதல் படமான ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்த ஆர்.ஜே.ஆனந்தி பிரதீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப் சேனலில் ஒன்றில் பேசிய ஆனந்தி ‘லவ்டுடே படத்தில் ஆண்களை நல்லவர்கள் போலவும், பெண்களை மோசமானவர்கள் போலவும் சித்தரித்து காட்சிகளை வைத்துள்ளார் பிரதீப். படத்தில் கதாநாயகியின் தங்கைக்கு ஒரு தப்பான ஒரு மெசேஜை தான் அனுப்பிவில்லை என நிரூபித்ததும் ஹீரோ பிரதீப் உத்தமன் ஆகிவிடுகிறார்.
ஆனால், ஒரு நடிகையை ‘பதம் பாக்கணும்’ என வசனம் வருகிறது. இதை எப்படி காமெடி என ரசிகர்கள் ரசிக்கிறார்கள்?. சினிமாவில் பெண்களை மோசமாக சித்தரிப்பதை எப்போது நிறுத்தப்போகிறார்கள் என தெரியவில்லை. எவ்வளவு நாள்தான் இதை நாம் பொறுத்துக்கொள்ள முடியும்’ என பொங்கி எழுந்துள்ளார்.
இதையும் படிங்க: 2022ன் வெளியான டாப் 10 திரைப்படங்கள்… உங்க பேவரிட் படம் இருக்கா?