latest news
Biggboss Tamil 8: வீட்டுக்குள் போகும் ‘கோமாளி’ நடிகை?
பிக்பாஸ் தொடங்க இன்னும் 2 மாதங்கள் உள்ளன. என்றாலும் கூட அதைப்பற்றிய பேச்சுக்கள் இப்போதே சமூக வலைதளங்களில் களைகட்ட ஆரம்பித்து விட்டன.
குறிப்பாக இந்த சீசனில் யாருக்கு எல்லாம் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இதன் காரணமாக நாள்தோறும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அமலா சாஜி தொடங்கி ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த சீசனில் உள்ளே செல்ல வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் கோமாளி படத்தில் நடித்த ஆர்ஜே ஆனந்தி இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த படத்தில் ஜெயம்ரவியின் தங்கை மற்றும் யோகிபாபுவின் மனைவியாக ஆனந்தி மிகவும் மெச்சூர்டான நடிப்பினை வழங்கி இருந்தார். இதனால் ஒருவேளை போட்டியாளராக அவர் உள்ளே செல்லும் பட்சத்தில் இறுதிப்போட்டி வரை தாக்குப்பிடிக்கும் திறமை அவரிடம் உள்ளது.
என்றாலும் தற்போது ப்ரோமோ ஷூட்டிங் மட்டுமே நடப்பதால் போட்டியாளர்களாக யாரெல்லாம் உள்ளே செல்கின்றனர் என்பதை நாம் சற்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.