வாரி வழங்கும் வள்ளல்...! இப்படி ஒரு நடிகரா...? ஆர்.ஜே.பாலாஜியால் மற்ற நடிகர்களுக்கு வந்த சோதனை...

ரேடியோ ஜாக்க்கியாக இருந்து இன்று ஒரு திரைப்பட நடிகராக பிரபலமாகியுள்ளார் ஆர்.ஜே.பாலஜி. சினிமாவில் எதிர்நீச்சல், தீயா வேலை செய்யனும் குமாரு, வாயை மூடி பேசவும், வடகறி, ஜில் ஜங் ஜக், காற்று வெளியிடை, ஸ்பைடர், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்த படத்தில் நயன்தாராவுடன் நல்ல நட்பு ஏற்பட்டதால் அவரை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அண்மையில் இவர் செய்த காரியத்தால் மற்ற முன்னனி நடிகர்களுக்கு ஒரு சோதனை வந்துள்ளது. என்னவெனில் பெரும்பாலும் நடிகர்களுடன் வரும் அசிஸ்டன்ட்களுக்கும் சேர்த்து தயாரிப்பாளர்கள்தான் சம்பளத்தைக் கொடுப்பார்களாம். அதில் நம்ம யோகிபாபு அவர்கள் அவரின் அசிஸ்டன்ட்க்கு 25000 பெற்றுக்கொண்டு 1000,500னு கொடுத்து மீதமுள்ள பணத்தை அவர் வைத்துக் கொள்வாராம்.
இவர்கள் மத்தியில் பாலாஜி அவருடைய அசிஸ்டன்ட்க்கு தினமும் 20000 ஐ நானே தருகிறேன் தயாரிப்பாளரிடம் இருந்து வாங்காமல் தானே கொடுப்பதாக முடிவெடுத்துள்ளாராம். இந்த செய்தியால் மற்ற நடிகர்களுக்கும் கொஞ்சம் கலக்கத்தில் உள்ளனராம்.