More
Categories: Cinema News latest news

அயலானா? கோட் படமா? ஆர்ஜே பாலாஜி யாரைப்பா இப்படி போட்டு பொளக்குறாரு!.. ஓஹோ அதான் விஷயமா?..

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அந்தப் படத்திற்காக புரோமோஷன் செய்து வரும் ஆர்ஜே பாலாஜி தொடர்ந்து நெகட்டிவ் பப்ளிசிட்டி செய்து வருவதாக நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

காமெடி நடிகராக சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் அறிமுகமான ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் பொங்கல் ரிலீசாக வெளியான அயலான் திரைப்படத்தை கலாய்த்துள்ளாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: சிம்பு படம் டிராப்லாம் ஆகலப்பா!.. வெயிட்டா வருது எஸ்டிஆர் 48 ஃபர்ஸ்ட் லுக்.. எப்போ தெரியுமா?..

ஒரு பக்கம் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள், இன்னொரு பக்கம் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நம்மகிட்ட இருக்கும் ஸ்டஃப் இதுதான் எனக் கூறிக்கொண்டு சுமாரான சிஜி படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏமாற்றினால் அந்தப் படத்தை பார்க்க வேண்டாம் என்று தான் நான் சொல்வேன் என ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.

சமீபத்தில் வெளியாகி உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஏலியன் படமாக சயின்ஸ்ஃபிக்‌ஷன் படமாக வெளியாகி உள்ள நிலையில் அந்தப் படத்தை சொல்கிறாரா அல்லது அடுத்து விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இளம் விஜய்யின் முகம் பொம்மை போல இருந்ததை பார்த்து கலாய்க்கிறாரா என சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் வாக்குவாதமே வெடித்துள்ளது.

இதையும் படிங்க: பப்ளிசிட்டி புடிக்காது!.. ஆனால், அதெல்லாம் பண்ணுவோம்.. அஜித்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!..

மூக்குத்தி அம்மன் கிராபிக்ஸ் வைத்துக்கொண்டு நாமெல்லாம் இப்படி பேசலாமா பாலாஜி என ரசிகர்கள் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஹீரோவை விளாசி வருகின்றனர். ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் படங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில், எந்த படம் ஹிட் அடிக்கப் போகிறது என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Published by
Saranya M

Recent Posts