More
Read more!
Categories: Cinema News latest news

ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ போல… அக்கப்போர்ல சிக்கி தவிக்கும் ஆர்.ஜே.பாலாஜி…

Actor R.J.Balaji: தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர். வானொலி ஒலிபரப்பாளராக இருந்த இவர் முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் தந்து முயற்சியினால் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.

கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரெளடிதான் திரைப்படத்தில் தனது காமெடி கலந்த நடிப்பினை மிக அழகாக வெளிகாட்டினார். இதற்காக இவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:இது உங்களுக்கு தேவையா?… பிக்பாஸின் தண்டனையால் கடுப்பான விசித்ரா…

பின் இது என்ன மாயம், தேவி போன்ற திரைப்படங்களில் நடித்தார். துணை கதாபாத்திரத்திலேயே நடித்த ஆர்.ஜே.பாலாஜி LKG திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இப்படத்தின் கதாநாயகனும் இவரே.

மேலும் இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தார். இவர் தற்போது இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிக்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை வேல் இண்டர்னேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தின் இயக்குனரான கோகுலுக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

அப்போது இப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இருவரையும் கண்டித்து படத்தினை தொடர்ந்து எடுக்க வைத்தார். இப்படத்தின் முதல் பாகம் மட்டும் படமாக்கப்பட்டுள்ளதாம். இதன் காட்சிகளை பார்த்த தயாரிப்பாளருக்கும் இதன் கதாநாயகனான ஆர்.ஜே.பாலாஜிக்கும் அந்த கதை பிடிக்கவில்லையாம்.

இதையும் வாசிங்க:லாரன்ஸும் ஜெயம்ரவியும் ஓரமா போய் விளையாடுங்க!.. சித்தா எத்தனை கோடி வசூல் தெரியுமா?!..

அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் திருப்தி அடையும்படி இல்லையாம். அதனால் ஆர்.ஜே.பாலாஜி தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சென்று இப்படத்தை தயவுசெய்து வெளியிட வேண்டாம் என கேட்டுள்ளாராம். அதற்கு பதிலாக ஐசர் கணேஷின் அடுத்த படத்தில் சம்பளம் இல்லாமல் நடித்து தருகிறேன் என கேட்டுள்ளாராம்.

ஏற்கனவே ஐசரி கணேஷின் பல படங்கள் திரைக்கு வராமல் இருக்கும்பட்சத்தில் இப்படமும் வெளியாகாதது இவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆர்.ஜே.பாலாஜியும் கஷ்டப்பட்டு ஒரு நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். இப்படி கதை நன்றாக வராத படம் வெளியானால் அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக இப்படி ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். இதனை ஐசரி கணேஷும் பரிசீலனை செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் வாசிங்க:வெற்றி மிதப்பில் மிதந்த நடிகருக்கு ஆப்பு வைத்த முருகதாஸ்… நிலைமை எப்போ வேணாலும் மாறலாம் சாரே…

Published by
amutha raja

Recent Posts