என் படத்துல நடிக்க கண்டிப்பா இந்த தகுதி இருக்கனும்...! நடிகைகளை ஃபில்டர் பண்ணும் ஆர்.ஜே.பாலாஜி..!

நடிகராகவும் இயக்குனராகவும் தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக தொடங்கிய தன் வாழ்க்கையை தன்னை ஊரறிய வேண்டும் என்பதற்காக படிப்படியாக முன்னேறி இன்று ஒரு பேர் சொல்லும் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார்.
தன் பேச்சு திறமையால் அனைவரையும் பரவசப்படுத்துபவர். முதலில் எல்.கே.ஜி என்ற படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். படம் அமோக வெற்றி பெற்றது. அதன் பின் நயன் தாரா நடிப்பில் உருவான மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி அதிலுல் அவர் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து ஹிட் படங்களையே கொடுத்த பாலாஜிக்கு ரசிகர்களும் ஆதரவை அளித்தனர்.
இவரின் படங்கள் நம் வாழ்க்கையில் அமைந்த எதார்த்தங்களை தன் நகைச்சுவை மூலம் நகர்த்தி மக்களை சந்தோஷப்படுத்துவதாக அமையும். அப்படி எடுக்கப்பட்ட படங்கள் தான் எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன். இவர் தற்போது வீட்ல விஷேசங்க என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இந்த படத்தில் சத்யராஜ், ஊர்வசி, நாயகியாக அபர்ணா முரளி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை பற்றி பாலாஜி கூறுகையில் வீட்ல விஷேசங்க படம் முழுக்க தமிழ் படமாக இருக்கும்.
எந்த மொழிகளிலும் டப்பிங் செய்யப்படமாட்டாது என கூறினார். மேலும் அதற்காகவே முழுக்க முழுக்க என் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு முதலில் தமிழ் தெரிந்திருக்க வேண்டும், தமிழ் நன்றாக பேச தெரியனும், அப்பொழுது தான் அந்த படம் தமிழ் மக்களை நல்லபடியாக சென்றடையும். அதனால் தான் நான் என் படத்தில் நடிக்கும் நடிகைகளை இப்படி தேர்வு செய்கிறேன் என்று கூறினார்.