More
Categories: latest news

அனிருத் கொடுத்த அட்வைஸ்!… ஆர்.ஜே பாலாஜிக்கு கிடைத்த சூப்பர் படம்… இப்படி ஓபனா சொல்லிட்டாரே?…

சொர்க்கவாசல் திரைப்படத்தில் தான் நடிப்பதற்கு எப்படி கமிட்டானேன் என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கின்றார் ஆர்.ஜே பாலாஜி.

வானொலியில் ஆர்ஜே-வாக தன்னுடைய கெரியரை தொடங்கியவர் தான் ஆர் ஜே பாலாஜி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் மாறி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertising
Advertising

இதையும் படிங்க: சாபம் கொடுக்குறீங்களே நீங்க என்ன கண்ணகியா?.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டு.. நயனை விளாசிய பிரபலம்!..

இதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதன்படி வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதிலும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகச்சிறந்த வரவேற்பை கொடுத்தது.

காமெடி நடிகராக பயணித்துக் கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி பின்னர் இயக்குனர் கே ஆர் பிரபு இயக்கத்தில் எல்கேஜி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் திடீரென்று இயக்குனராக களம் இறங்கினார். மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தை நடிகை நயன்தாராவை வைத்து இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து சத்யராஜ், ஊர்வசி ஆகியோரை வைத்து வீட்டில் விசேஷம் என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். பின்னர் ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றார். தற்பொழுது சூர்யாவின் 45வது திரைப்படத்தை இவர்தான் இயக்கப் போகின்றார் என்கின்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கின்றது.

rj balaji

இதற்கிடையில் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தில் அவர் சிறை சாலையில் இருக்கும் ஒரு அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்திற்கு தேர்வானது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசியிருந்தார்.

‘இந்த படம் குறித்து ஒரு முறை என்னிடம் பேசினார்கள். அப்போது நான் இந்த படம் ஜெயிலில் நடக்கின்றது. ஜெயிலில் மிக கொடூரமான நபர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு இளைஞன் மாட்டிக் கொள்கின்றான். அவனின் நிலைமை என்ன ஆகின்றது என்கின்ற பீல் வரவேண்டும். அவர்கள் ஏற்கனவே படத்திற்கு தேர்வு செய்த நடிகரும் மிகப்பெரிய சூப்பர் ஹீரோ தான். அவர் ஜிம்முக்கு எல்லாம் சென்று பார்ப்பதற்கு அவர் 10 பேரை அடிப்பது போல் இருப்பார்.

அவரைப் பார்ப்பதற்கு எப்படியும் வில்லனை அடித்து தும்சம் செய்து விடுவார் என்பது போல இருக்கின்றது. இவர் இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார். அனிருத் சொன்னது கரெக்ட் தான். என்னை போல ஒரு அப்பாவி இளைஞன் தான் இப்படத்திற்கு செட்டாவார் என்று நான் கூறினேன். உடனே அவர்களும் நீங்களே நடிக்கலாமே என்று கூற எனக்கும் அந்த கதை பிடித்து போனதால் உடனே சம்மதித்து விட்டேன்.

இதையும் படிங்க: ஓவர் கிரிஞ்சு… ஒரு மண்ணும் இல்ல… நயன்தாரா திருமண டாக்குமெண்ட்ரி.. Honest review இதோ!..

எனக்கு பிடித்திருக்கிறது நான் செய்தாலும் இப்படம் நன்றாக தான் இருக்கும் என்று கூறினேன். இருப்பினும் இந்த தகவல் அனிருத் உங்களுக்கு கொடுத்தது. எனவே ஒரு முறை அவரிடம் கேட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினேன். உடனே படக்குழுவினர் அனிருத்திடம் இது குறித்து கூற அவரும் மிகச் சிறந்த ஆப்ஷன் என்று கூறினாராம்.

இதனை படக்குழுவினர் என்னிடம் கூறியவுடன் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னர் இந்த திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து முடித்து விட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இப்படத்தை அனிருத் பார்த்தார். பார்த்துவிட்டு ஒரு மணி நேரம் என்னிடம் போன் செய்து இப்படம் குறித்து பேசி இருந்தார். எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். அனிருத் ட்விட் போட்டாலே மிகப்பெரிய ஹிட் ஆகும். ஒரு மணி நேரம் பேசியிருக்கின்றார் கண்டிப்பாக இது வெற்றி படமாக இருக்கும்’ என்று அந்த பேட்டியில் ஆர்.ஜே பாலாஜி பேசியிருந்தார்.

Published by
ramya suresh