இதுலக்கூட நக்கலா?.. சொர்க்கவாசல் ரிலீஸ்!. வித்தியாசமாக புரமோஷன் செய்த ஆர்.ஜே பாலாஜி!..

rj balaji
சொர்க்கவாசல் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஆர்.ஜே பாலாஜி வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் இயக்குனராகவும் இருந்து வருபவர் ஆர் ஜே பாலாஜி. வானொலியில் ஆர்.ஜே வாக வாழ்க்கையை தொடங்கிய பாலாஜி அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
இதையும் படிங்க: ஜாக்குலினிடம் அசிங்கமாக பேசிய ராணவ்… சண்டைக்கு வந்த சவுந்தர்யா… பிக்பாஸ் ஆட்டம்…
அந்த வகையில் தீயா வேலை செய்யணும் குமாரு, வாயை மூடி பேசவும், வடகறி, இது என்ன மாயம், நானும் ரவுடிதான், ஜில் ஜங் ஜக் உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.
ஒரு பக்கம் இயக்கம் ஒரு பக்கம் மற்ற இயக்குனர்களின் படங்கள் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றார் ஆர் ஜே பாலாஜி. அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தை இயக்கப் போகின்றார். இப்படத்தின் பூஜை நேற்று பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த திரைப்படத்தில் நடிகர் திரிஷா கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார். தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடித்திருக்கும் சொர்க்கவாசல் திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. கிறிஸ்டோ சேவியர் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் படம் குறித்து பல youtube நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுத்த ஆர் ஜே பாலாஜி படம் குறித்து புரமோஷன் செய்திருந்தார். நாளை படம் வெளியாக உள்ள நிலையில் புதிய வீடியோ ஒன்றை ஆர் ஜே பாலாஜி வெளியிட்டு இருக்கின்றார்.
இதையும் படிங்க: ஷூட்டிங்கில் முதல் 3 நாள் படுத்தி எடுத்த லோகேஷ் கனகராஜ்!. கடுப்பாகி விஜய் கேட்ட கேள்வி!..
அதில் அவர் தெரிவித்ததாவது 'நான் நடித்த சொர்க்கவாசல் திரைப்படம் உங்க ஊரில் ரிலீஸ் ஆகப்போகுது அங்கிள். அதனால ஆன்ட்டியை கூப்பிட்டு உங்க பையன், பொண்ணு எல்லாரையும் கூப்பிட்டு போய் இந்த படத்தை பாருங்க. நிச்சயம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். முற்றிலும் மாறுபட்ட முயற்சியால் ரா க்ரிட்டி ஆக்சன் கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நான் நடிச்சிருக்கேன்.
அது எதுக்கு நான் போய் பாக்கணும் அப்படின்னு கேட்காம தாயுள்ளம் கொண்டு நீங்க போய் பாத்தீங்கன்னா நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். புக்கிங் ஓபன் ஆயிருக்கு? அதனால எல்லாரும் படத்தை புக் பண்ணி என்ஜாய் பண்ணுங்க' என்று தனது நக்கலான பாணியில் வீடியோ வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை வைரலாகி வருகிறார்கள்.
#RJBalaji jail thriller #Sorgavaasal - releasing tomorrow in theatres!
— Movie Tamil (@MovieTamil4) November 28, 2024