விஜய் டிவியில் இருந்து வந்தா எல்லாரும் சிவகார்த்திகேயன் ஆயிட முடியாது?!.. ஆர்.ஜே பாலாஜி ஓபன் டாக்!..

Published on: November 24, 2024
sivakarthikeyan
---Advertisement---

விஜய் டிவியில் நுழைந்தால் அனைவரும் சிவகார்த்திகேயனாக முடியாது அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆர்.ஜே பாலாஜி கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் தற்போது மிகச்சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருகின்றார் ஆர்.ஜே பாலாஜி. வானொலியில் ஆர்.ஜே வாக தனது கெரியரை தொடங்கிய பாலாஜி அதன் பிறகு தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க தொடங்கினார். எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

Also Read

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷை காதலித்த எஸ்கே… கடைசியில் நடந்த பிரச்னை… விளாசும் பிரபலம்

நடிப்பு மட்டும் இல்லாமல் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இயக்குனராகவும் தன்னை நிரூபித்து இருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

இந்த திரைப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

rj balaji
rj balaji

இந்த நிகழ்ச்சியில் ஆர்.ஜே பாலாஜி படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு ஆர்.ஜே பாலாஜி சூர்யாவை வைத்து சூர்யா 45 என்கின்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கோயம்புத்தூரில் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கின்றார்.

சொர்க்கவாசல் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு சேனல்களுக்கு ஆர்.ஜே பாலாஜி பேட்டி கொடுத்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டி கொடுத்த அவர் சிவகார்த்திகேயன் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘ஒரு சில நபர்கள் விஜய் டிவியில் நுழைந்தால் அனைவரும் சிவகார்த்திகேயன் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள் .

இதையும் படிங்க: கங்குவா படத்துல வர்ற ரெட்ரோ சீன்ஸ் எல்லாம் எங்கே எடுத்தாங்கன்னு தெரியுமா? திரில்லிங்கான இடமாச்சே!

அது உண்மை கிடையாது. விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் அசாதாரணமான உழைப்பு அனைவரையும் விரும்பச் செய்தது. அதன் மூலமாக அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. விஜய் டிவிக்குள் நுழைந்ததால் சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு வந்தது என்று அர்த்தம் கிடையாது. இப்போது கிடைத்திருக்கும் பேரும் புகழும் அவரது உழைப்புக்கு கிடைத்தது என்று ஆர் ஜே பாலாஜி பேசியிருக்கின்றார்.