அந்த விஷயத்துல லோகேஷை விட நான்தான் சீனியர்!.. வயித்தெறிச்சல்ல பேசுறாரோ ஆர்.ஜே.பாலாஜி?....

நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் இயக்கிய வீட்ல விஷேசம் படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்களும் குடும்ப குடும்பமாக வந்து கொண்டாடுகின்றனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் புரோமோஷனுக்காக கமல் மாதிரியே ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று ஆதரவை பெற்றார் பாலாஜி.
ஏற்கெனவே எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற பாலாஜியின் படங்கள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் நல்ல பெயரை பெற்றுள்ளன. மேலும் பாலாஜியின் எதார்த்தமான அந்த நகைச்சுவை தான் இங்கு வரை கொண்டு வந்துள்ளது. அதுவும் விக்ரம் படம் வெளியாகி மூன்று வாரங்கள் தான் கடந்த நிலையில் வீட்ல விஷேசம் படத்தை ரிலீஸ் செய்திருப்பது ஒரு தைரியம் தான்.
இருந்தாலும் இந்த படத்தையும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விக்ரம் படத்திற்காக லோகேஷ் யுனிவெர்ஸ் என்ற பெயர் டேக் செய்யப்பட்டு இணையத்தில் வைரலானது. அதே போல் பாலாஜிக்கும் யுனிவெர்ஸ் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். இதை அவரிடம் இந்த மாதிரி யுனிவெர்ஸ் என்ற சொல்லை கேட்கும் போது எப்படி உணர்கிறீர்கள் லோகேஷுக்கும் உருவானது, இப்பொழுது உங்களுக்கும்? என கேட்க அதற்கு பாலாஜி 2020 லயே மூக்குத்தி அம்மனுக்காக அந்த க்ளைமாக்ஸ் காட்சியில் பார்த்தால் தெரியும்.
பகவதி பாபாவிற்காக கொடுத்த இடத்தை முதலைமைச்சர் எல்.கே.ஜி திரும்ப பெற்றுக் கொண்டார் என ஹாட்ஸ்டாரில் பாஸ் பண்ணி பார்த்தால் தெரியும். அப்பொழுதே யுனிவெர்ஸ் எனக்கு உருவாயிற்று என கூறினார். இருந்தாலும் நானும் லோகேஷும் நண்பர்கள், வருங்காலத்தில் இரண்டு யுனிவெர்ஸும் சேர்ந்து எதாவது ஒன்னு நல்லது பண்ணால் நல்லாதான இருக்கும் என கூறினார்.