என்னது ‘பஞ்சதந்திரம் 2’வில் கமல் கேரக்டரில் இந்த நடிகரா? ஆர். ஜே.பாலாஜி சொன்ன சூப்பரான தகவல்

RJ Balaji: ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை ஆரம்பித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அதன் மூலமாகவே மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர். மிகவும் வேகமாக பேசுவதின் மூலம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்தவர். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு பாலாஜிக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

அதன் பின் ஹீரோவுக்கு நண்பனாக தன் நகைச்சுவை மூலமாக மக்களை ரசிக்க வைத்தார். இப்படி காமெடி நடிகனாகவே வந்த ஆர். ஜே. பாலாஜி திடீரென ஹீரோவாக புது அவதாரம் எடுத்தார். ஹீரோவாக நடித்த முதல் படமே மாபெரும் வெற்றிப் பெற்றது. எல்.கே.ஜி என்ற ஒரு அரசியல் பின்புலத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படம் நகைச்சுவையின் மூலம் சிறந்த கருத்துக்களை சொல்லும் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: தாளக்கருவியே இல்லாமல் இளையாராஜா இசை அமைத்த சூப்பர்ஹிட் பாடல்… எந்தப் படம்னு தெரியுமா?

இதன் தொடர்ச்சிதான் அடுத்து அடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஒரு உந்துதலாக அமைந்தது. மூக்குத்திஅம்மன், வீட்ல் விஷேம்ங்க, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். இயக்குனராகவும் சினிமாவில் வலம் வருகிறார். அதுபோக கிரிக்கெட் கமெண்ட்டராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இப்படி பன்முக திறமை கொண்ட பாலாஜி ஒரு தனியார் சேனலில் அஜித்தை பற்றி கூறியிருக்கிறார். அதாவது அஜித்திற்கு பஞ்சதந்திரம் படத்தில் கமல் கேரக்டரில் நடிக்க வைத்தால் பிரம்மாதமாக இருக்கும் என்றும் ஒரு வேளை பஞ்சதந்திரம் 2 படத்தை எடுத்தால் கமல் கேரக்டரில் அஜித் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: பாஸ்வேர்ட் சொன்ன எம்.ஜி.ஆர்!.. அள்ளிக்கொடுத்த ‘ஆளவந்தான்’!… கையிலெடுத்த ‘கோச்சடையான்’!

அதுமட்டுமில்லாமல் சிம்ரன் கேரக்டரில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அஜித்திடம் ஒரு கரிஷ்மா இருக்கிறது. அவருடைய ஸ்டைல், தோற்றம் எல்லாம் பஞ்சதந்திரம் 2 படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

 

Related Articles

Next Story