More
Categories: Cinema News latest news

பாய் பெஸ்ட்டிக்கு பரோட்டாவை வைத்து சூப்பர் விளக்கம்!.. ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் செம சீன்!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் இந்த வாரம் சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகிறது. ஆர்ஜே பாலாஜி, மீனாக்‌ஷி செளத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஆர்ஜே பாலாஜியின் தாத்தாவாக லால் நடித்துள்ளார். அவர் கிராமத்தில் வைத்த சிங்கப்பூர் சலூனை பிரம்மாண்டமான முறையில் நடத்த ஆசைப்படும் நாயகனின் கதை தான் இந்த சிங்கப்பூர் சலூன்.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் – மனைவிக்கு இடையில் விரிசல் விழ இதுதான் காரணமா? அவங்க சொல்றது சரிதானே!..

வரும் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் பிரத்யேக ஸ்னீக் பீக் காட்சி ஒன்று தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்பாவாக நடித்துள்ள தலைவாசல் விஜய்யுடன் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்துக் கொண்டு பரோட்டாவை பிச்சுப் போட்டு சாப்பிடும் ஆர்ஜே பாலாஜி சலூன் கடை வச்சு சாதிக்க முடியாதா? அதுக்குன்னு அவ என்ன பிரேக்கப் பண்ணிட்டு பாய் பெஸ்ட்டியுடன் போயிட்டாப்பா என ஆர்ஜே பாலாஜி கோபமாக சொல்ல, நீ இன்னும் மாறலடா எப்போ கோபம் வந்தாலும் நல்லா சாப்பிடுற என கலாய்க்கும் தலைவாசல் விஜய் அது என்னடா பாய் பெஸ்டீ என கேட்கிறார்.

இதையும் படிங்க: ஒருவழியா பிளான் போட்ட விஷால்!.. இது நடந்தா நடிகர் சங்க கட்டிடம் ரெடி!.. ஆனா நடக்குமா?!..

பரோட்டாவுக்கு என்ன ஊத்தி சாப்பிடுறோம் என கேட்டு குருமா தானே என சொல்லும் பாலாஜி அப்புறம் எதுக்கு இந்த தயிர் பச்சடி. இதுதான்ப்பா பாய் பெஸ்டீ என கூறும் காட்சி வெளியாகி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்துகிறது.

சமீப காலமாக வெளியாகும் பல படங்களில் பாய் பெஸ்ட்டீ தொல்லை அதிகமாகவே இருப்பது தெரிகிறது.

Published by
Saranya M

Recent Posts