Karuppu Movie: திரிஷாவா இருக்கிறது ரொம்ப கஷ்டம்! – கருப்பு பட விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு

Published on: April 26, 2026
rj balaji - trisha
---Advertisement---

சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே.பாலாஜி ,

திரிஷாவா இருக்கிறது ரொம்ப கஷ்டம். அது திரிஷாவுக்கு மட்டுமே தெரியும். சூர்யா ரொம்ப நல்லவர். அவருக்கு இன்னும் நல்லது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

அஜித்தின் வலிமை படத்தை விட கருப்பு படத்துக்கு தான் நீங்கள் அதிக அப்டேட்டை கேட்டுள்ளீர்கள் என்று அவர் கூறியபோது அரங்கத்தில் ரசிகர்களின் கரகோஷம் அதிர்ந்தது.

தேதி அறிவித்தால் சென்சார் போர்டில் ஒரு குத்து குத்துறாங்க..இருப்பினும், ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, ஆனால் சொன்னபடி படம் செமையா ரிலீஸ் ஆகும் என்று கூறினார்.