கமல்ஹாசன் படத்தை தவறாக எடைப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி… கடைசில இப்படி ஆகிடுச்சே!
தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களை கவர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. இவரின் கிரிக்கெட் கம்மென்ட்ரிக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதற்கும் அதிகமாக இவரது திரைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “எல்.கே.ஜி”, “மூக்குத்தி அம்மன்”, “வீட்ல விசேஷம்” ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கடந்த வாரம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த “ரன் பேபி ரன்” என்ற திரைப்படம் கூட குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றிருந்தது.
இதில் “வீட்ல விசேஷம்” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. அதாவது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து வெளிவந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி, “விக்ரம்” திரைப்படத்தை தவறாக எடைபோட்டது குறித்து பேசியுள்ளார். அதாவது “விக்ரம் திரைப்படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வீட்ல விசேஷம் திரைப்படம் வெளிவந்தது. இரண்டு வாரங்களில் மக்கள் அடுத்த படத்தை கொண்டாட தொடங்கிவிடுவார்கள் என நினைத்தோம். ஆனால் விக்ரம் திரைப்படம் தொடர்ந்து ஐந்து வாரங்கள் கொண்டாடப்பட்டது. எனினும் வீட்ல விசேஷம் திரைப்படம் கடவுள் புண்ணியத்தில் சாகவில்லை” என கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடித்துவிட்டது என்றால் 5 வாரங்கள் அந்த படத்தை கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள். லவ் டூடே, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சத்யராஜ் படத்திற்கு சம்பளமே வாங்காமல் 12 மணி நேரம் டப்பிங் பேசிய பாகுபலி நடிகை… என்னப்பா சொல்றீங்க!