ஒரேநாளில் வைரலான ஆர்.ஜே.பாலாஜி... ஆடியோ ஜாக்கியாக இருந்தபோது செய்த மாஸ் சம்பவம்...
எஃப்.எம்மில் ஆடியோ ஜாக்கியாக இருந்த ஆர்.ஜே பாலாஜி அப்போதே தரமான சம்பவங்களை செய்ததாக சில ஆச்சரிய தகவல்கள் வைரலாகி வருகிறது.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. சின்ன வயதிலேயே தந்தை குடும்பத்தை கவனிக்காமல் சென்று விட ஆரம்பமே வறுமையில் துவங்கி இருக்கிறது. வீட்டுக்கு மூத்த பையனான ஆர்.ஜே.பாலாஜிக்கு அடுத்து ஒரு தம்பி மற்றும் 3 தங்கைகள் இருக்கிறார்கள்.
பாலாஜி தனது பள்ளி படிப்பை மட்டும் 11 பள்ளிகளில் பயின்றதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 12ம் வகுப்பு பொது தேர்வில் பாஸ் ஆகாமல் இருந்தாராம். ஒருமுறை வெளியில் நண்பர்களை பார்க்கும் போது அவர் வயது பெண்கள் எல்லாம் கல்லூரியில் இருந்ததால் மீண்டும் 12ம் வகுப்பு பரீட்சையை எழுதி பாஸ் செய்திருக்கிறார்.
தொடர்ந்து மேற்படிப்பை தொடங்கினார். 2006ம் ஆண்டு குமாரராணி மீனா முத்தையா கலைக் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியலை முடித்தார். தொடர்ந்து, கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா கம்யூனிகேஷன் ஸ்கூல் ஆஃப் கம்யூனிகேஷனில் ஜர்னலிசத்தில் எம்.எஸ்.சி படிக்க சேர்ந்தார்.
பெரிய ஆங்கில தொலைக்காட்சியில் ஆர்.ஜே வாக வேண்டும் என்பதே பாலாஜியின் கனவாக இருந்தது. இதை ஹாஸ்டலில் எழுதப்பட்ட ஒரே லெட்டர் மூலம் உடைந்தது. சில காரணங்களுக்காக எழுதப்பட்ட 56-வார்த்தைகள் கொண்ட ஆங்கிலத்தில் இருந்த லெட்டரில் 47 இலக்கணப் பிழைகள் இருந்ததாம். அதனால் ஆங்கில தொலைக்காட்சி ஆசையை மூட்டை கட்டினார்.
இதையும் படிங்க: “மூக்குத்தி அம்மன்” படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்… அட இது பைக் விளம்பரமாச்சே!!
அந்த நேரத்தில் ரேடியோ மிர்ச்சி கோயம்புத்தூரில் ஆடிஷனுக்கான விளம்பரத்தினை பார்க்கிறார். உடனே அதற்கு விண்ணப்பித்து விடுகிறார். இவரை நேர்காணல் செய்தது சரவணன் மீனாட்சி செந்தில் தானாம். அதே நாளில் வேலைக்கு வந்தவர் தான் மா.கா.பா. 10 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து விடுகிறார்.
வேலைக்கு சேர்ந்த ஒரே வாரத்தில் கல்யாணம் நடந்து விடுகிறது. மனைவிக்காக சென்னைக்கு வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு ரேடியோ சேனலில் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போதே சம்பளத்தினை பற்றி யோசிக்காமல் பிக் எஃப்.எம்மில் சேர்கிறார்.
அங்கு அவர் செய்த ஒரு நிகழ்ச்சியால் ஒரே நைட்டில் வைரலாகிறார். இன்று பலரும் ப்ராங்க் என செய்து வந்தாலும் அதற்கெல்லாம் ஆர்.ஜே.பாலாஜி செய்த க்ராஸ்டாக் தான் முன்னோடி என்பதை யாருமே மறக்க முடியாது. அங்கு தொடங்கிய அவர் கேரியர் இன்று நடிகராகும் வரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.