ஆர்.ஜே.பாலாஜி தொட்டுப் பார்க்க துடித்த அந்த நடிகர்....சொன்னா நம்ப மாட்டீங்க!...
ரேடியோ தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. கிரிக்கெட் போட்டிகளின் போது நேரலையில் வர்ணனை செய்யும் பணியையும் அவர் சிறப்பாக செய்து வருகிறார்.
துவக்கத்தில் கதாநாயகனின் நண்பனாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர் எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோ ஆனார். தமிழகத்தின் நடப்பு அரசியலை அப்படத்தில் கிண்டல் செய்திருந்தார்.
அப்படம் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் வெற்றி பெற்றது. அதன்பின் அவர் கதை, திரைக்கதை எழுதிய திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் அவர் இணை இயக்குனராகவும் பணியாற்றினார். இப்படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : என் மகன் இப்பத்தான் நடிச்சிருக்கான்… சமந்தா கணவரை பாராட்டிய நாகார்ஜுனா….
தற்போது பாலிவுட்டில் ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவர் சிறு வயதில் இருக்கும் போது பாக்கியராஜ் இயக்கி நடித்த ‘முந்தானை முடிச்சு’ படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்தாராம். அப்போது அதில் நடித்த பயில்வான் ரங்கநாதன் அங்கு நின்று கொண்டிருந்தாராம்.
அவரின் ஆஜானு பாகுவான உடலை பார்த்த பாலாஜிக்கு அவரை தொட்டுப்பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். இந்த தகவலை அவரே பயில்வான் ரங்கநாதனிடம் கூறியுள்ளார். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு யுடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஒருவன் சினிமாவை உண்மையாக நேசித்தால் சரியான இடத்தை அடைவார் என்பதற்கு ஆர்.ஜே. பாலாஜியே உதாரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.