”பணத்துக்காக என்ன மறந்து அவன் கூட போனியே” அஜித்தையே புலம்பவிட்ட ஆர்ஜே.. யாரு சாமி நீ!..

Published On: April 11, 2025
| Posted By : Saranya M

சமீபத்தில் சோசியல் மிடியாவில் வைரலாகி வந்துக்கொண்டிருந்த ச்சீ.. ச்சீ பாடலை தமிழில் உருவாக்கி பாடி டாப் டிரெண்டாக்கிய நபர் தனது பாடலை குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற செய்ததை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்துள்ளார்.

சமுக வலைத்தளத்தில் மாதத்திற்கு ஒரு பாடல் ட்ரெண்டாகி வருகிறது. மேலும், சமீபத்தில் வைரலான ச்சீ ச்சீ பாடலின் மொழி புரியாவிட்டாலும் அதற்கு பலரும் ஆடிப்பாடி ரீல்ஸ் போட்டுக்கொண்டிருந்தனர். அதையடுத்து அந்த பாடல் திடீரென தமிழில் ”பணத்துக்காக என்ன மறந்து அவன் கூட போனியே” என மாற்றி பாடப்பட்டு ஹிட் ஆகியது.

அஜித் குமாரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்தில் நடிகை த்ரிஷா அஜித்துடன் வாழ்ந்துக்கொண்டே பிரகாஷ் என்பவருடன் தொடர்பில் இருந்தது போல் கதை இருந்ததால் தமிழாக்கம் செய்யப்பட்ட அந்த பாடல் கச்சிதமாக பொருந்தி இருந்தது. விடாமுயற்சி படத்தின் காட்சிகளுக்கு ச்சீ ச்சீ பாடலை சேர்த்து எடிட் செய்யப்பட்ட ரீல்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும், விடாமுயற்சி படத்தை ட்ரோல் செய்யப்பட்ட பாடலை குட் பேட் அக்லி படத்தில் இடப்பெற்ச்செய்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படி இருந்தது. ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் போல் குட் பேட் அக்லி படத்தை உருவாக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் தற்போது அந்த பாடலை தமிழில் பாடிய சூரியன் எஃப் எமில் ஆர்ஜேவாக இருக்கும் கௌதம் நான் எழுதி பாடிய ”ச்சீ ச்சீ குமாரி நீ ஒரு ச்சீ” பாடலை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு ஆதிக் ரவிசந்திரன் மற்றும் அஜித் சாருக்கு நன்றி என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். நீதானப்பா அந்த சம்பவத்தை செய்தது என பலரும் ஆர்ஜே கெளதமை பாராட்டி வருகின்றனர்.