---Advertisement---

வைஃப் படத்தின் முதல் சிங்கிள் நீ சாரல் வெளியீடு!

Published on: April 6, 2026
wife tamil movie
---Advertisement---

இன்றைய இளம் தம்பதிகளிடன் காணப்படும் ஈகோ, உறவு சிக்கல்களை காதலும் காமெடியும் கலந்து வரும் படம்தான் வைஃப். ஹேமநாதன் R என்ற இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிக்கிறார்.

சின்னத்திரை, யூடியூப் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான RJ விஜய் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகம் ஆகிறார். நாயகியாக நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் வைஃப் படத்தின் முதல் சிங்கிளான நீ சாரல் என்ற பாடல் இன்று வெளியானது. காதலின் ஆழத்தை உணர்த்தும் இந்த பாடலின் வரிகளை, பிரபல இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்

அவரே பின்னணிப் பாடகி சுபலக்‌ஷினியுடன் இணைந்து இந்த இனிமையான பாடலைப் பாடியுள்ளார். காதலின் ஆழத்தை உணர்த்தும் இதன் வரிகளை, பிரபல இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தப் பாடல் இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.