நானும் ரவுடிதான் படத்தில் நான் நடிக்க முடியாது.. அடம் பிடித்த நடிகரிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்

by Akhilan |
Nanum rowdy than
X

Nanum rowdy than

Naanum Rowdy than: நயன்தாராவின் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் பிரபல நடிகர் முதலில் நடிக்க முடியாது என மறுத்ததாகவும் அவருக்கு பதில் பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்தவர் விக்னேஷ் சிவன். அவரிடம் இருக்கும் உத்வேகத்தை புரிந்து கொண்ட நடிகர் தனுஷ் தனியாக அழைத்து கதை கேட்டதாக கூறப்படுகிறது. அப்படி அவர் சொன்ன கதை தான் நானும் ரவுடிதான் படம். தனுஷ் தன்னுடைய நிறுவனம் மூலம் தயாரிப்பதாக ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: அப்போ எல்லாம் பொய்யா கோபால்.. கீர்த்தியின் 15 வருட காதலர் இவர்தானாம்!..

படத்திற்கு முதலில் ஆறு கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்தது. ஆனால் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையே இருந்த காதலால் படப்பிடிப்பில் பல கோளாறுகள் நடந்திருக்கிறது. இதனால் படம் குறிப்பிட்ட பட்ஜெட்டை விட 10 கோடி அதிகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இது தனுஷ் தரப்பிற்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாம். படம் சூப்பர் ஹிட் என கூறப்பட்டால் கூட தனுஷிற்கு வியாபார ரீதியாக படம் நஷ்டம் என்றே கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தற்போது நயன்தாரா டாக்குமெண்டரி விவகாரத்தில் நேராக தனுஷிடம் செல்லாமல் நயன் மற்றும் விக்கி ஆடிய தில்லாங்கடியே அவர் என்ஓசிக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிகிறது.

இதையும் படிங்க: Biggboss Tamil: வீட்டைவிட்டு ‘வெளியேறிய’ ரியாவின்… மொத்த ‘சம்பளம்’ இதுதான்?

RJ balaji

RJ balaji

மிர்சி சிவா, கௌதம் கார்த்திக் மற்றும் சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த கேரக்டரில் இசையமைப்பாளர் அனிருத் நடித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால் அது எதுவும் சரியாக அமையவில்லையாம்.

பின்னர் விக்னேஷ் சிவன் கோரிக்கையை ஏற்று ஆர்.ஜே பாலாஜி அந்த கேரக்டரை நடித்திருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி அவருக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இதை ஒப்புக்கொண்டதாகவும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Next Story