தொழிலாளர்கள் வயித்தில் அடிக்காதீங்க...அஜித்தை வெளுத்து வாங்கிய செல்வமணி...
நடிகர் அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதே இல்லை. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் அவர் நடிக்கும் பெரும்பலான திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அவர் நடிப்பில் வெளியான வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை ஆகிய படங்களின் படப்பிடிப்பு அங்குதான் நடைபெற்றது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பும் அங்குதான் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்காக சென்னையில் உள்ள அண்ணாசாலை போன்ற செட் அங்கு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெப்சி திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி இன்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில், அஜித் நடிக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்பு தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதனால், தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இங்கேயே அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தலாம். அதற்கான வசதிகள் சென்னையில் இருக்கிறது. எங்கள் கோரிக்கையை விஜய் ஏற்று பல காட்சிகளை சென்னையில் எடுக்கிறார். ஆனால், அஜித் இதை செய்வதில்லை. எனவே, அவரிடம் இந்த கோரிக்கையை வைக்கிறோம். இங்குள்ள தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துவது சரியில்லை’ என அவர் தெரிவித்தார்.
மேலும், ‘காட்சிக்கு தேவைப்பாடால் வெளிமாநிலங்களு செல்லலாம். ஆனால், தொடர்ந்து ஹைதாராபாத்திலேயே அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடைபெறுவது நல்லதல்ல’ என அவர் கூறினார்.