Cinema News
எங்க ஊர்ல இப்படி பண்ணுனா திட்டுவாங்க! கோலிவுட்டில் நடந்த சம்பவத்தால் நடுங்கிய மம்மூட்டி
மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய புகழ்பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. மலையாள சூப்பர் ஸ்டார் என்றே மம்மூட்டி அழைக்கப்படுகிறார். கிட்டத்தட்ட கமல், ரஜினி ரேஞ்சுக்கு மலையாளத்தில் இவர்தான் டாப். தமிழில் இவர் நடித்த சில படங்களே ஆனாலும் அந்தப் படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவையாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆட்சி, தளபதி, ஆனந்தம்,அரசியல் போன்ற படங்கள் மம்மூட்டி நடித்த தமிழ் படங்கள். இவருக்கென தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில் மம்மூட்டியை பற்றி பிரபல இயக்குனர் ஆர்.கே. செல்வமணி சில விஷயங்களை பகிர்ந்தார். மம்மூட்டியை வைத்து மக்கள் ஆட்சி மற்றும் அரசியல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் செல்வமணி.
படப்பிடிப்பின் போது எந்தவொரு பெரிய நடிகராக இருந்தாலும் முதலில் என்ன பண்ணுவோம்? அருகில் இருக்கும் நாற்காலியை எடுத்து அமர சொல்வோம். அதே மாதிரிதான் மம்மூட்டிக்காக ஒரு நாற்காலியை எடுக்க போனார்களாம். அதை பார்த்ததும் மம்மூட்டி ‘எப்பா! என்னை கெடுத்துருவீங்க போல. இப்படியெல்லாம் எங்க ஊர்ல பண்ணா திட்டுவாங்க’ என சொல்லி அவரே நாற்காலியை எடுத்து அமர்ந்து கொண்டாராம்.
அதே போல் அவருக்கான சாப்பாடும் அவர் வீட்டில் இருந்துதான் வருமாம். அவருக்குண்டான் காஸ்டியூமை அவர் வேண்டாம் என சொல்லிவிடுவாராம். அவருக்காக கார் டிரைவர்,உதவியாளர் என இவர்களுக்கான பேட்டா காசு போன்றவற்றை அவருடைய சொந்த செலவில்தான் செய்வாராம். தயாரிப்பாளர்களுக்கு வெட்டியாக எந்த செலவும் வைக்கமாட்டாராம்.
ஒரு சமயம் மம்மூட்டி படத்திற்கு அவருக்கு சம்பளமாக செல்வமணி 25 லட்சம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஒரு மலையாள படத்திற்கு மம்மூட்டி வெறும் 2 லட்சம்தான் சம்பளமாக வாங்கினாராம். இதை செல்வமணி ‘என் படத்திற்கு 25 லட்சம் வாங்குனீர்கள்? இதுக்கு மட்டும் ஏன் இப்படி?’ என கேட்டிருக்கிறார்.
அதற்கு மம்மூட்டி ‘இந்த கதை அவ்வளவுதான் தேறும். அவ்வளவா ஓடாது’ என கூறினாராம். இதை பற்றி செல்வமணி கூறும் போது அந்த படம் ஒரு ஆர்ட் ஃப்லிம். 20 நாள்தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.அப்போ ஒரு கலைஞன் என்றால் எப்படி இருக்கிறார் பாருங்கள் என மம்மூட்டியை பற்றி பெருமையாக அந்த பேட்டியில் பேசினார் செல்வமணி.