Cinema News
நம்பாத விஜயகாந்த்.. அவமானத்தை தாண்டி சாதித்து காட்டிய செல்வமணி.. மறக்க முடியாத புலன் விசாரணை…
திரையுலகை பொறுத்தவரை முதல் படத்தை இயக்கும் இயக்குனர்கள் தயாரிப்பாளர் மூலம் பல அவமானங்களை சந்திப்பார்கள். ஏனெனில், அந்த இயக்குனர் என்ன மாதிரியான படம் எடுப்பார்?.. அவரின் திறமை என்ன? என எதுவுமே தயாரிப்பாளருக்கு அப்போது தெரியாது. பல வகைகளிலும் குடைச்சல், சிக்கல் எல்லாம் வரும். அதையும் தாண்டி நின்றால் மட்டுமே இயக்குனராக முடியும்.
அதேபோல், அதே இயக்குனர் தனது முதல் படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட்டால் பல தயாரிப்பாளர்களும் அவரை தேடி வருவார்கள். தொடர் ஹிட் படங்களை அந்த இயக்குனர் கொடுத்துவிட்டால் அதன்பின் அவருக்கான சுதந்திரம் கிடைக்கும். அவர் சொல்வதே பட்ஜெட். அவர் கேட்பதை தயாரிப்பாளர் செய்து தருவார்கள்.
இதையும் படிங்க: என் வாழ்க்கையில் முக்கிய 2 நடிகைகள்.. 2 இயக்குனர்கள்.. மனம் திறந்து சொன்ன விஜயகாந்த்…
ஊமை விழிகள் படம் மூலம் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு விஜயகாந்தும், ராவுத்தரும் வாய்ப்பு கொடுத்ததால் பலரும் வாய்ப்பு கேட்டு அங்குதான் போனார்கள். அப்படி போன இயக்குனர்களில் ஒருவர்தான் ஆர்.கே.செல்வமணி. அப்படி உருவான படம் ‘புலன் விசாரணை’. வழக்கமான விஜயகாந்தை காட்டக்கூடாது, அதேபோல், வழக்கமான ஆக்ஷன் படமாக இருக்கக்கூடாது என செல்வமணி முடிவெடுத்தார். ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் திரைக்கதை எழுதினார்.
ஆனால், அவர் மனதில் இருந்தது விஜயகாந்துக்கும், இப்ராஹிம் ராவுத்தருக்கும் புரியவில்லை. செல்வமணி அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தினார். இது விஜயகாந்துக்கே சந்தேகத்தை வரவழைத்து ராவுத்தரிடம் சொல்ல அவர் செல்வமணியை நெருக்கினார். அவர் மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. படப்பிடிப்பு குழுவில் எல்லோருமே செல்வமணியை ஒரு மாதிரி பார்த்தார்கள். சினிமாவில் பேட்ச் ஒர்க் என சொல்வார்கள். படப்பிடிப்பு முடிந்த பின்னர் சின்ன சின்ன ரியாக்ஷன்களை எடுப்பார்கள். அதற்கு ஆயிரம் அடியை மட்டுமே கொடுப்பேன் என ராவுத்தர் சொல்லிவிட கஷ்டப்பட்டு அதற்குள்ளேயே எடுத்து முடித்தார்.
இதையும் படிங்க: ராவுத்தர் – விஜயகாந்த் பிரிவு துவங்கிய புள்ளி அதுதான்!.. கடைசிவரை சேராமல் போன சோகம்..
படத்திற்கு அதிக செலவு செய்துவிட்டதால் கோபமடைந்த ராவுத்தர் ‘செல்வமணி என் கண்ணிலேயே படக்கூடாது’ என எல்லோரிடமும் சொல்லிவிட்டாரம். படம் ரிலீசான அன்று படக்குழு எல்லோரும் படம் பார்த்தபோது செல்வமணி உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனவே, ரசிகர்களோடு சேர்ந்து தியேட்டரில் படம் பார்த்தார். படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதன்பின்னரே ராவுத்தருக்கும், விஜயகாந்துக்கும் செல்வமணியை புரிந்தது. அவன் ஏதோ சொல்ல நினைத்திருக்கிறான். நமக்குதான் புரியவில்லை என உணர்ந்தனர்.
உடனே ஆளுயர மாலையை வாங்கி செல்வணியை தேடிச்சென்று அவரின் கழுத்தில் அணிவித்த ராவுத்தார் ‘விஜியின் 100வது படத்தை நீதான் இயக்குகிறாய்’ என சொன்னார். அப்படி உருவான படம்தான் கேப்டன் பிரபாகரன். அதுவும் இமாலய வெற்றி. இந்த படத்திற்கு பின்னரே எல்லோரும் விஜயகாந்தை ‘கேப்டன்’ என அழைக்க துவங்கினார். இப்போது வரை அது நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மூச்சுவிட சிரமப்படும் விஜயகாந்த்!.. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன?!.. நடப்பது இதுதான்!..