Categories: Cinema News latest news

அஜித் படம்னா அடங்கியிருக்கனுமா என்ன?.. நடிகையின் திமிர் பேச்சால் அதிர்ந்து போன பிரபல நடிகர்!…

பெரும்பாலும் நடிகைகளில் சிலர் வளர்ந்து வரும் நிலையில் தன்னுடைய சர்ச்சையான பேச்சுக்களால் வருகிற வாய்ப்புக்களையும் கெடுத்து மூலையில் உட்காரும் நிலை பலபேருக்கு நிகழ்ந்திருக்கிறது.அப்படி ஒரு நடிகை பேசிய பேச்சால் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஒரு பிரபலம் மேடையில் திட்டி தீர்த்திருக்கிறார்.

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் இயக்கி நடித்த பில்லா பாண்டி படம் பெரும் வரவேற்பை பெறா விட்டாலும் அஜித்தின் ரசிகர் என்ற முறையில் அந்த படத்தை எடுத்து நடித்தேன் என்பதில் மகிழ்ச்சி என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ‘ப’ வரிசை படங்களில் பட்டையைக் கிளப்பிய நடிகர் திலகம்

அந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை இந்துஜா. இவர் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார். இவருடைய ஒரு பேட்டியை பார்த்த சுரேஷ் மிகவும் கடுப்பாகி அந்த நடிகையை பற்றி மேடையில் கிழி கிழினு கிழித்து விட்டார்.

நடிகை இந்துஜாவிடம் நீங்கள் நடித்ததிலேயே மிகவும் மோசமான படம் எது என கேட்க அதற்கு இந்துஜா பில்லாபாண்டி என கூறியிருக்கிறார். அதை கேட்டுத்தான் சுரேஷ் செம காண்டாயிட்டார். சுரேஷ் மூலமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை, அதுவும் அந்த படம் அஜித்தின் வெறித்தனமான ஒரு ரசிகனின் கதை. அந்த படம் தான் மோசமான படம் என்று சொல்லியிருக்கிறார். அந்த படத்தை எடுத்தேன் என்கிற முறையில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் ஏற்றி விட்ட ஏணியை இன்று பல நடிகைகள் காலால் மிதித்து விடுகிறார்கள் என்றும் கூறி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சுரேஷ்.

Published by
Rohini