எம்ஜிஆரின் படத்தை விமர்சித்த ஆர்.எம்.வீரப்பன்!.. காதுபட கேட்டு சும்மா இருப்பாரா மக்கள் திலகம்?..
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடியும் ஏதாவது ஒரு வகையில் ஒருவர் கண்டிப்பாக இருப்பார்கள். அந்த வகையில் சினிமாவிலும் அரசியல் களத்திலும் ஜொலித்த எம்ஜிஆருக்கு பின்னாடியும் பில்லராக ஒருவர் இருந்தார். கே.பாலசந்தருக்கு எப்படி அனந்துவோ , கண்ணதாசனுக்கு பின்னாடி எப்படி ராமபிரானோ அதே போல் எம்ஜிஆருக்கு பின்னாடி ஆர்.எம்.வீரப்பனும் இருந்தார்.
எம்ஜிஆர் தனக்கு உதவியாளராகத்தானே ஆர்.எம்.வீரப்பன் இருக்கிறார் என்று அவரை எந்த ஒரு சமயத்திலும் ஒரு வேலைக்காரனைப் போல் நடத்தியதில்லை. சினிமா சம்பந்தமாக எம்ஜிஆரை பார்க்கப் போகும் அனைவரிடமும் வீரப்பனை கேளுங்கள், வீரப்பனிடம் சொல்லிவிட்டீர்களா? என்று மரியாதையாகத்தான் நடத்தினார் எம்ஜிஆர்.
அப்படிப் பட்ட வீரப்பன் எப்படி எம்ஜிஆருடன் இந்த அளவுக்கு நெருக்கமானார் என்பதை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார். எம்ஜிஆர் கருணாநிதியுடன் சேர்ந்து ‘நாம்’ என்ற படத்தை தயாரித்தாராம். சொல்லப்போனால் எம்ஜிஆர் தயாரித்த முதல் படம் ‘நாம்’. ஆனால் அந்த படம் பெருந்தோல்வியை சந்தித்திருக்கிறது.
எம்ஜிஆரின் நாடகங்களில் குறிப்பிடத்தக்க நடிகராக இருந்தவர் நாராயணப்பிள்ளை. அவரின் நண்பராகத்தான் இருந்திருக்கிறார் வீரப்பன். ஒரு சமயம் நாம் படம் எதனால் தோல்வியடைந்தது என்பதை பற்றியும் என்ன மாற்றம் செய்திருக்கலாம் என்பதை பற்றியும் நாராயணப்பிள்ளையிடம் கூறியிருக்கிறார் வீரப்பன். இதைக் கேட்டதும் இந்த அளவுக்கு தெளிவாக விமர்சித்ததை எண்ணி வியப்பாகி உன்னை எம்ஜிஆரிடம் அழைத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு அழைத்துச் சென்றிருக்கிறார்.
ஆனால் வீட்டில் சக்கரபாணிதான் இருந்தாராம். இருந்தாலும் அவரிடமும் நாம் படத்தை பற்றி விமர்சித்திருக்கிறார். சக்கரபாணிக்கும் அவர் விமர்சித்த விதம் பிடித்துப்ப் போக எம்ஜிஆரிடம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டி அனுப்பிவிட்டாராம். அதன் பின் கே.ஆர்,ராமசாமி நாடக மன்றத்தை கலைத்த போது எம்ஜிஆர் இடிந்த கோயில் என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : இவ்வளவு காசு கொட்டுன்னா இனி எப்படி படம் எடுப்பாரு… மிஷ்கினுக்கு அடித்த லாட்டரியை பாருங்கப்பா!!
அப்போது இந்த நாடகத்திற்கு ஒரு நிர்வாகி இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதிய எம்ஜிஆரிடம் வீரப்பனை பற்றி கூறியிருக்கிறார் நாராயணப்பிள்ளை. உடனே அழைத்து வரச் சொல்லி பார்த்த எம்ஜிஆர் முதல் சந்திப்பிலேயே அவரை நிர்வாகியாக ஆக்கிவிட்டாராம். அது முதலே இறுதி வரை எம்ஜிஆருக்கு பக்க பலமாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன்.