சத்தம் இல்லாம சம்பவம் பண்றது இப்படிதானோ? ராபர் படத்தின் திரைவிமர்சனம்!..

robber
Robber: சில சின்ன இயக்குனர்கள் கூட முரட்டுத்தனமாக கதையை இயக்குவார்கள் என்பதுக்கு உதாரணமாகி இருக்கிறது ராபர் படக்குழு. இப்படத்தின் ஆச்சரியப்பட வைக்கும் திரை விமர்சனம் இதோ!
'ராபர்' திரைப்படத்தின் திரைக்கதையை மெட்ரோ படத்தின் ஆனந்த கிருஷ்ணன் எழுதியுள்ளார். சென்னையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்கி இருக்கிறார் எஸ்.எம்.பாண்டி.
மெட்ரோ சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் உள்ளிட்ட பிரபலங்கள் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். பலர் நடித்துள்ளனர். ஒரு சாதாரண இளைஞனுக்கு திடீரென சொகுசு வாழ்க்கையில் ஆசை வருகிறது.

robber
இதனால் காலையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இரவில் செயின் திருடனாக இரட்டை வாழ்க்கை வாழ்கிறான். ஆனால், அந்த திருட்டு சம்பவத்தில் ஒரு இளம் பெண் உயிரிழக்க, அவளது தந்தை பழிவாங்க துரத்துகிறார்.
இன்னொரு புறம், அவருடைய எதிரிகள் துரத்த அந்தப் போராட்டத்திலிருந்து சத்யா எப்படி தப்பிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயன்று இருக்கின்றனர். எப்போதும் போல ஹீரோ சத்யா தன்னுடைய கேரக்டரை சரியாக செய்துள்ளார்.
அம்மாவிடம் அப்பாவியாக நடந்து கொள்ளுவதும், பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காத கோர முகம் என அசால்ட் காட்டுகிறார். மகளை இழந்த தந்தையாக ஜெயபிரகாஷ், வில்லனாக டேனி போப், சென்ராயன் என தெரிந்த முகங்களால் படத்துடன் ஒன்ற முடிகிறது.
படத்தில் சில லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும், கிளைமேக்ஸில் தீபா அதை சரி செய்ய முயல்கிறார். இன்று பலர் படும் செயின் பறிப்பு சம்பவங்களின் வேதனையை சொல்ல முயன்றதில் இயக்குனர் அப்ளாஸ் வாங்குகிறார்.