சின்னத்திரையில் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பல காமெடி ஷோக்களில் காமெடி நடிகராகவும் இருந்து பிரபலமானவர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் ஒரு பாடி பில்டராக இருந்தார். அதன் பின் எப்படியாவது மீடியா முன் தோன்றி சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தார் ரோபோ சங்கர். சிரிச்சா போச்சு டீமில் வடிவேல் பாலாஜி கொடுத்த ஆதரவால் மக்களால் ரசிக்கப்பட்டார் ரோபோ சங்கர்.
அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் நடக்கும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து தன் அந்தஸ்தை உயர்த்தியும் கொண்டார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில நிகழ்ச்சிக்கும் இவரே நடுவராகவும் இருந்தார். இப்படி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரையில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. மாரி, சிங்கம் , விஸ்வாசம் போன்ற பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்தார்.
இதனால் வெள்ளித்திரையில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். இப்படி அவருடைய வளர்ச்சி ஏறுமுகமாக செல்ல ஒரு கட்டத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மிகவும் மோசமான கண்டீசனுக்கு சென்றார். ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் ரோபோ சங்கர். எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்து பழைய நிலைக்கு மாறினார். அதன் பிறகு தான் அவருடைய மகள் திருமணம் நடந்தது.
இதையும் படிங்க: சூர்யாவை ஜீரோ ஆக்கிய ஜோதிகா.. கங்குவா படத்திற்கு மட்டும் பொங்கி எழுந்தது ஏன்?
இந்த நிலையில் ரோபோ சங்கர் துணை முதல்வரான உதய நிதியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். உதயநிதியிடம் ஆரம்பத்தில் ஒரு நல்ல நெருக்கம் இருந்தது. மிகவும் ஜாலியாக பேசுவேன். திடீரென துணை முதல்வரானார் என்ற செய்தி கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் எனக்குள்ள ஒரு சிறு தயக்கம் இருந்தது. முன்பு மாதிரி அவரிடம் பேச முடியுமா? பழக முடியுமா? அவருக்கு வாழ்த்து சொல்லலாமா? எதுவும் நினைப்பார? என்றெல்லாம் மனதிற்குள் ஓடியதாம்.
ஒரு நாள் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக அங்கு போகலாம் என நினைத்தாராம் ரோபோ சங்கர். ஆனால் இப்போ போகலாமா என்ற சந்தேகத்துடன் உதய நிதியின் போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் ‘பாப்பாவுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். உங்களுக்கு பத்திரிக்கை வைக்கனும். உங்களுக்கு போன் பண்ணும் போதெல்லாம் சுவிட்ச் ஆஃப்னு வருது. அதான் இந்த வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன்’என சொல்லி அனுப்பினாராம்.
இதையும் படிங்க: புஷ்பானா பேரு இல்ல!… புஷ்பானா பிராண்டு!… செம மாஸா தெறிக்கவிட்ட புஷ்பா 2 டிரைலர்!…
எந்தவொரு சாதாரண மனிதனும் இந்த மாதிரி அனுப்பும் போது ‘ஓ அப்படியா? சரி வாங்க’ அப்படித்தான் சொல்வான். ஆனால் உதய நிதியும் பதிலுக்கு வாய்ஸ் மெசேஜில் ‘என் போன் சுவிட்ச் ஆஃப்ல இருக்கும் போது ஏன் போன் பண்ணீங்கனு’ பதிலுக்கு சொல்லி அனுப்பினாராம். அந்தளவுக்கு அதே எதார்த்தத்துடன் தான் உதய நிதி இருக்கிறார் என ரோபோ சங்கர் கூறினார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…