More
Categories: Cinema News latest news

கிளியை வளர்த்தேன்.. தூக்கிட்டாங்க.. இப்ப இத வளர்க்குறேன்!.. தில்லு இருந்தா வாங்க.. சவால் விடும் ரோபோ சங்கர்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். மிமிக்ரி மூலம் மக்களை கவர்ந்த ரோபோ சங்கர் தன்னுடைய தனித்திறமையால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பேரில் பல படங்களில் காமெடி நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டார்.

சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, அஜித் என அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு ரோபோ சங்கருக்கு வந்தது. அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் முகத்தை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ரோபோ சங்கர் மீது வனத்துறை சார்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

Advertising
Advertising

robo1

விதிமுறைகளுக்கு மீறி அவரது வீட்டில் வெளிநாட்டு கிளிகள் இரண்டை வளர்ப்பதாக சங்கர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது. ஆனால் ரோபோ சங்கருக்கு அந்தக் கிளிகள் இரண்டும் கிஃப்ட்டாக வந்தவை. அதனால் அந்த விதிமுறைகள் பற்றி அவருக்கு எதுவும் தெரியாததால் வீட்டில் வளர்த்து அதை தன் யுடியுப் சேனலில் வீடியோவாக பதிவிட்டார்.

அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் சங்கர் வீட்டிற்கு வர அந்த நேரம் அவர் வெளிநாட்டிற்கு தன் குடும்பத்தோடு சென்றதால் அந்த கிளிகளை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்று வந்தனர். செய்தி தெரிந்து வந்த சங்கரை வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் செய்திருக்கின்றனர்.

robo2

வேண்டுமென்றே செய்திருந்தால் கண்டிப்பாக சங்கருக்கு சிறைத் தண்டனை கிடைத்திருக்கும். அதன் பின் 2.50 லட்சம் அபராதம் என சொல்லியிருக்கின்றனர். இந்த நிகழ்வை நியாபகப்படுத்தி பேசிய ரோபோ சங்கர் ஒரு கல்லூரி விழா மேடையில் கிளிகளை வளர்த்தேன், ஒரு கிளியை வளர்த்தது தப்பா?

இதையும் படிங்க : விக்ரம் படத்துல இப்படி ஒரு செண்டிமெண்ட் நடந்துச்சா!. லோகேஷ் பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!…

என் வீட்டில் இன்னும் சில பிராணிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என அவரது மனைவியையும் மகளையையும் குறிப்பிட்டு சொன்னார். அப்போது அதை கேட்ட அனைவரும் சிரித்து விட்டனர்.

Published by
Rohini

Recent Posts