மகள் கல்யாணத்தை வச்சு காசு பார்த்த ரோபோ சங்கர்!.. இப்ப இதுதான் டிரெண்டு போல!…

Published on: April 20, 2024
robo sankar
---Advertisement---

விஜய் டிவியியில் ஒளிபரப்பான ‘கலக்கப் போவது யாரு’ போன்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரோபோ சங்கர். தீவிர கமல் ரசிகரான இவர் சிறந்த மிமிக்ரி கலைஞர். குரல் மட்டுமல்ல டேன்ஸ் மிமிக்ரியையும் அசத்தலாக செய்வார். குறிப்பாக விஜயகாந்த், எம்.ஜி.ஆர் போல அசத்தலாக நடனம் ஆடுவார்.

டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ஒருகட்டத்தில் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மாரி, மன்னர் வகையறா என பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பாரு என் கூட வந்திடுங்க ப்ளீஸ்.. வயசு பசங்களை கெஞ்ச வைக்கும் விஜே பார்வதி!.. செம பிக்ஸ்!..

இவரின் மகள் இந்திரஜா. விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். இவர் தனது மாமாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் துவங்கியது முதில் திருமணமாகும் வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளுமே வீடியோவாக வெளிவந்தது.

wedding

அதில், இந்திரஜாவின் கணவர் தனது மாமியார் அதாவது ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த சம்பவம் எல்லோரையு அதிர வைத்தது. கன்னத்தில் முத்தம் கொடுக்க போக அவர் திரும்பிவிட்டார் என விளக்கம் கொடுத்திருந்தார் அவர். அவர்கள் எங்கு சென்றாலும் ஊடகங்கள் இதே கேள்வியை கேட்டு வருகிறது. இதனால், அவர்கள் கடுப்பாகி பதில் சொன்னதும் நடந்தது.

இதையும் படிங்க: கொஞ்சமாவது நடிக்க கத்துக்குங்க.. மண்ட பத்தரம்!. விஜய் ஆண்டனியை போட்டு பொளக்கும் புளூசட்ட மாறன்..

இந்திரஜா திருமணத்திற்கு உறுதியானது முதல் திருமணம் மற்றும் அதற்கு பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்து பிரபல யுடியூப் சேனல் ஒன்று மொத்தமாக ஒரு விலையை பேசி உரிமை வாங்கி இருக்கிறது. எனவே, இந்திரஜா திருமணம் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளுமே அந்த யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி வந்தது.

wedding

இதற்காக அந்த நிறுவனம் ரோபோ சங்கருக்கு ரூ.15 லட்சம் பணம் கொடுத்திருக்கிறதாம். இன்னமும் இந்திரஜா திருமணம் தொடர்பான அதில் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தத்தில் மகள் திருமணத்தை வைத்து ரோபோ சங்கர் கல்லா கட்டிவிட்டார் என ரசிகர்கள் பேச துவங்கிவிட்டனர்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.