திடீரென கமல்ஹாசனை குடும்பத்துடன் சந்தித்த ரோபோ சங்கர்!.. அட அப்போ அது கன்ஃபார்ம் தான் போல!..

நடிகர் கமல்ஹாசனை ரோபோசங்கர் குடும்பத்துடன் சென்று சந்தித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த சீசனில் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில், தற்போது ரோபோசங்கர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து உள்ளாரா கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் எந்த ஒரு பிக் பாஸ் போட்டியாளர்களும் நடிகர் கமல்ஹாசனை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக சந்தித்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: நடிகருடன் கோர்த்து விட்டு பேசியப்போ அமைதியோ அமைதி!.. இதுக்கு மட்டும் காஞ்சனாவா மாறுறாரே அந்த நடிகை… ஏன்?

மேலும், இந்திரஜா தான் கட்டிக்கப் போகும் தனது மாமாவுடன் சென்ற நிலையில், இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கப் போகிறதா? அதற்காகத்தான் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

கமல்ஹாசனை முதலில் பார்த்துள்ள நிலையில், கண்டிப்பாக பிக்பாஸ் சீசன் 7க்கான ஏற்பாடுகள் தான் என ரசிகர்கள் திட்டவட்டமாக முடிவு செய்துள்ளனர். அக்டோபர் 1ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், இந்திரஜா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஆளுக்கு முன்னாடி துண்டு போட்ட அயலான்… அப்பவாச்சும் படத்த விட்டா சரிதான்…

நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரஜா நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். கடந்தாண்டு அதிதி சங்கர் அறிமுகமான விருமன் படத்தில் தோழியாக நடித்திருந்தார்.

மேலும், அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் இந்திரஜா என்பது குறிப்பிடத்தக்கது. விஜே பார்வதியை போலவே இவரும் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிகள் பங்கேற்கப் போகிறார் என தெரிகிறது.

Related Articles
Next Story
Share it