அஜித்துக்கு அத கத்து கொடுத்ததே நான்தான்! வித நான் போட்டது – சீக்ரெட்டை பகிர்ந்த ரோபோ சங்கர்

Published on: July 9, 2023
robo
---Advertisement---

மது, புகை என தன் வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட நடிகர் ரோபோ சங்கர் மறுபிறவி எடுத்து இப்போதுதான் தேறி வருகிறார். கிட்டத்தட்ட உடல் எடை மிகவும் மெலிந்து பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்த ரோபோவை அவரது மனைவியான பிரியங்கா மிகவும் அக்கறையுடனும் பாதுகாப்புடனும் பார்த்து பழைய நிலைமைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

சின்னத்திரையில் பல சாதனைகளை செய்து வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையான கதாபாத்திரங்களால் மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் ரோபோசங்கர். வெள்ளித்திரைக்கு போனாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொள்வார்.

robo1
robo1

இதையும் படிங்க : எவன்கிட்டயும் நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன்… சினிமாவால் கடுப்பாகி பாலச்சந்தர் எடுத்த முடிவு!..

ஸ்பாட்டிலேயே 5000 ரூபாய்

அதோடு எந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ரோபோவை கவர்கிறார்களோ அவர்களுக்கு 5000 ரூபாய் தொகையை அன்பு பரிசாக ஸ்பாட்டிலேயே கொடுத்து ஷாக் கொடுப்பார். இப்படி பல உதவிகளை செய்யக் கூடியவராக விளங்கினார் ரோபோ சங்கர்.

சினிமாவில் அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா என அனைத்து முன்னனி நடிகர்களுடன் தனது நகைச்சுவையான கதாபாத்திரத்தில் இணைந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர். சமீபகாலமாக தனக்கு என்ன நடந்தது என்பதை பற்றி ஊடகங்களில் வெளிப்படையாக பேட்டி மூலம் தெரிவித்து வருகிறார் ரோபோ சங்கர்.

அப்படி ஒரு பேட்டியில் பங்கேற்ற போது அஜித்தை பற்றியும் கமலை பற்றியும் சில ரகசியங்களை பகிர்ந்தார். அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் என்ற படத்தில் இணைந்து நடித்திருப்பார் ரோபோ. படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்த போது ரோபோவின் மனைவி மற்றும் மகள் அஜித்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சென்றார்களாம். அஜித்தை பார்த்து பேசியிருக்கிறார்கள். ஆனால் புகைப்படம் எடுக்க முடியவில்லையாம்.

robo2
robo2

இதையும் படிங்க : வடிவேல் நடித்த அந்த ஹிட் காமெடி என் அம்மா சொன்னது!.. காலம் கடந்து உண்மையை சொன்ன மாரிமுத்து !..

அஜித் கொடுத்த ஷாக்

ஏனெனில் அஜித் இரண்டு நாள்களும் சூட்டிங்கில் இருந்ததனால் கெட்டப்பில் இருந்தாராம். அதன் பின் இவர்கள் ஊருக்கு கிளம்பும் சமயத்திலும் அஜித்தை பார்த்து  விட்டு சொல்லிட்டு போயிரலாம் என நினைத்து போயிருக்கிறார்கள். அப்போது அஜித் ஒரு நிமிடம் இருங்கள் என கேரவனுக்குள் போயி தனது கெட்டப்களை களைந்து விட்டு புகைப்படம் எடுத்து அதன் பின்னரே இவர்களை அனுப்பியிருக்கிறார்.

அதோடு அந்தப் படத்தில் அஜித்துக்கு விசில் அடிக்க கற்றுக் கொடுத்ததே ரோபோதானாம். அதுவும் அஜித் சரியான நிறம் என்பதால் அவர் விசில் அடித்து அடித்து அவரின் கன்னமே சிவந்து போயிருச்சாம். மேலும் கமலுடன் ஒரு புகைப்படத்தில் கமல் ரோபோவிற்கு முத்தம் கொடுத்த மாதிரி போஸ் இருக்கும். ஆண் மகனுக்கு முத்தம் கொடுத்ததில் கமல் எனக்கு தான் முதன் முதலில் முத்தம் கொடுத்திருக்கிறார் என்றும் அதன் பிறகே விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் இவர்களுக்கு கொடுத்தார் என்றும் கூறினார்.

robo3
robo3

இதையும் படிங்க : விஜய் வரவே மாட்டேனு சொல்லிட்டாரு! வடிவேலு பட இசைவெளியீட்டு விழாவில் நடந்த களேபரம்