தனுஷ் அந்த பழக்கத்தை விட்டுட்டார்!.. பொசுக்குன்னு உண்மையை போட்டு உடைத்த ரோபோ சங்கர்...

by சிவா |
robo shankar
X

நடிகர்கள் என்றாலே அவர்களுக்கு மதுப்பழக்கம், புகை பிடிப்பது, நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவது என பல ஜாலியாக இருப்பார்கள். அதேபோல் எல்லா நடிகர்களும் அப்படி இருப்பார்கள் எனவும் சொல்ல முடியாது. திரையுலகை பொறுத்தவரை சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. படப்பிடிப்பு முடிந்தால் வீடு என்கிற பழக்கத்தை உடையவர்கள். இன்னும் சில நடிகர்களும் இந்த பட்டியல் இருக்கிறார்கள்.

danush

அதேநேரம் அதிக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் என்றால் அது தனுஷ் மட்டுமே. ஏனெனில், அவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகுவார். அவர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொள்வார். அமலாபால் போன்ற சில நடிகைகளும் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் இவர். அதேபோல், டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து சினிமாவில் நுழைந்தவர் ரோபோ சங்கர். அதிகமான மதுப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டவர் இவர். இவரின் தோற்றத்தை பார்த்து ரசிகர்களை அதிர்ந்து போனார்கள்.

robo

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ரோபோ சங்கர் ‘என்னிடம் இருந்த ஒரு கெட்டப்பழக்கம் தனுஷிடம் இப்போது இல்லை. ஓப்பனாகவே சொல்கிறேன். நான் அதிக அளவில் சரக்கு அடிப்பேன். தனுஷுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. ஆனால், அவர் அந்த பழக்கம் அவரிடம் இப்போது இல்லை’ என தெரிவித்தார்.

நடிகர் சிம்புவும் இதேபோல் டிவிட்டரில் ஒரு முறை தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இப்போது விட்டுவிட்டேன் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story