அடுத்த சூரரை போற்று.. சூர்யா சூப்பர்.. பாராட்டு மழையில் மாதவனின் ராக்கெட்ரி.. டிவிட்டர் விமர்சனம் இதோ...

நடிகர் மாதவன் முதன் முதலாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் பெரிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்கி அதனை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் எடுத்துள்ளார். ஒரு ராக்கெட் விஞ்ஞானியின் வாழ்வை தழுவி இப்படத்தை எடுத்துள்ளார்.
சூரரை போற்று திரைப்படத்தில் கேப்டன் ஜி.என்.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்டபோது போல மாதவன் இயக்கி உள்ள ராக்கெட்ரி திரைப்படத்தில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் இன்று ரிலீசாக உள்ளது. ஆனால், நேற்று பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதனை பார்த்த பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில் மாதவன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீண்ட வருடங்கள் கழித்து ஹீரோயினாக சிம்ரன் இதில் மாதவன் மனைவி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து இருக்கின்றனராம். அதே போல மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் வேலைகளை சிறப்பாக செய்து உள்ளனராம். இயக்குனர் மாதவன் சிறப்பாக தனது இயக்குனர் வேலையை செய்துள்ளார் எனவும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் பதிப்புக்கு சூர்யா, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புக்கு ஷாருக்கான் என கவுரவ தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதில் தமிழ் பதிப்பில் சூர்யா முதல் மற்றும் இரண்டாம் பாதியில் வந்து விடுகிறார். விக்ரமில் அவரது கதாபாத்திரம் ஆக்ரோஷமாக இருந்தது என்றால் இதில் மிகவும் ஆத்மாத்தமாக நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாம். 3
இதையும் படியுங்களேன் - விஜய் - அஜித்தை 'அந்த' விஷயத்தில் ஃபாலோ செய்யும் ஜெயம் ரவி.! இத சிவகார்த்திகேயனே செஞ்சிட்டாரே...
இசையமைப்பாளராக சாம்.சி.எஸ். கதைக்கு தேவையான சிறப்பான இசையை கொடுத்துள்ளாராம். தமிழில் இப்படத்தை தமிழ்நாடு தியேட்டரில் வெளியிட உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது.
மொத்தத்தில், இது வழக்கமான மாஸ் மசாலா என்டர்டெய்னர் அல்ல என்றும், மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் ஒரு பரபரப்பான நிஜ வாழ்க்கை கதையை தெளிவாக சொல்கிறது. கண்டிப்பாக மக்கள் பார்க்க வேண்டிய, அறிந்துகொள்வதற்கும் தகுதியான திரைப்படம் இதுவாகும் என பலரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.