லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை நல்லவேளை நடத்தவில்லை என தற்போது நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித் குமார் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பார்கள் என்கின்றனர். அந்த அளவுக்கு ரோகிணி தியேட்டரில் விஜய் ரசிகர்கள் தரமான சம்பவத்தை செய்து நடிகர் விஜய் பெயருக்கே கெட்ட பெயரை உருவாக்கி தந்துள்ளனர்.
நரிக்குறவ மக்களை உள்ளே அனுமதிக்காமல் போன பாவம் தான் இதெல்லாம் என ஒரு பக்கம் நெட்டிசன்கள் ரோகிணி தியேட்டருக்கும் சாபம் விட்டு வருகின்றனர். இந்நிலையில், ரோகிணி தியேட்டரில் சேர்கள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட நிலையில், வெளியே வந்த ரசிகர் ஒருவரிடம் யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்தன. அப்போது, ஒரு ரசிகர் தளபதி பெயரை அசிங்கப்படுத்தவே ரோகிணி தியேட்டர் பார்க்கிறது என்றார்.
இதையும் படிங்க: கடைசியா அங்கேயே கைவச்சிட்டியே லோகி!.. லியோ அந்த சீன் அட்டுக் காப்பி!.. இதோ ஆதாரம்!..
மேலும், உரிய ஏற்பாடுகள் செய்யாமல் எதற்கு டிரெய்லர் செலிபிரேஷன் ரோகிணி தியேட்டரில் கண்டிப்பாக நடக்கும், அதற்கான பர்மிஷனை கேட்டு வருகிறோம் என தொடர்ந்து சொல்லி இத்தனை ஆயிரம் ரசிகர்களை அடைத்து வைத்து, ஒரே நேரத்தில் திறந்து விட்டால் இந்த கதி தான் ஆகும் எனக் கூறியுள்ளார்.
விஜய் ரசிகர்கள் மீது தவறு இல்லை என்றும் வரிசையாக படத்திற்கு எப்படி ரசிகர்களை அனுப்புவார்களோ அதே போல குறிப்பிட்ட ரசிகர்களை வரிசையாக உள்ளே அனுமதித்திருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது என்றும் இனிமேல் விஜய் ரசிகர்களை தேவையில்லாமல் உசுப்பேற்றாதீர்கள், அவர்களது படைபலம் அதிகம், ஓசியில் டிரெய்லர் ரிலீஸ் என்றதுமே ஊரில் உள்ள அனைவரும் உள்ளே புகுந்து விட்டனர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எல்சியூவுக்கு நோ சொன்ன விஜய்!.. ஹாலிவுட் படத்தை அப்படியே உருவிய லோகேஷ் கனகராஜ்!.. அதே தான்..
ஆடியோ லான்ச் நடத்திருந்தால் நேரு ஸ்டேடியமே நாசமாகியிருக்கும் என்றும் இதற்கு மேல் விஜய் ரசிகர்களுக்காக வெளியே வர மாட்டார் என்றும் அந்தளவுக்கு ரசிகர்கள் வெறியர்களாக மாறியுள்ளனர் என சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…