இதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை... நடிகை ரோஜாவால் அதிர்ந்த சினிமா உலகம்.. என்ன சொன்னார் தெரியுமா?

by Akhilan |
இதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை... நடிகை ரோஜாவால் அதிர்ந்த சினிமா உலகம்.. என்ன சொன்னார் தெரியுமா?
X

Roja

ரோஜாவின் மகள் விரைவில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், இயக்குனர் செல்வமணி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், நடிகை ரோஜா தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.

தெலுங்கு பட உலகின் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் ரோஜா. ராஜேந்திர பிரசாத் நடிப்பில் வெளியான பிரேமா தபசு தான் ரோஜாவின் முதல் படம். தொடர்ந்து அவரை ஆர்.கே.செல்வமணி தமிழுக்கு அழைத்து வந்தார். செம்பருத்தி படத்தில் பிரசாந்தின் நாயகியானார். அதை தொடர்ந்து, சரத்குமார் நடிப்பில் சூரியன் என்ற படத்திலும் நடிக்க ரோஜாவிற்கு கோலிவுட்டில் வரவேற்பு கூடியது. ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்தன.

Roja Family

தனது முதல் இயக்குனரான செல்வமணி மீது ரோஜாவிற்கு காதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் தங்கள் காதலினை தெரிவித்து கொண்டனர். ஆனால், ரோஜா சினிமாவில் வளர்ந்த நேரம், இயக்குனராக தொடர் தோல்விகளை சந்தார் செல்வமணி. இதுவே இவர்கள் காதலுக்கு பின்னர் பிரச்சனையாக வந்தது.

இருந்தும் அவரை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என பிடிவாதம் பிடித்து ரோஜா திருமணம் செய்து கொண்டாராம். இத்தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள். அன்சுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இயக்குனர் செல்வமணி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

Roja Family

இந்நிலையில், தனது மகளுக்கு நடிக்கவெல்லாம் ஆர்வம் இல்லை. அவளுக்கு சயின்டிஸ்ட்டாக வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார். இதனால் அவர் சினிமாவில் நடிக்க துளியும் வாய்ப்பு இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

Next Story