நடிகை ரோஜா போட்ட டான்ஸ்..! - ரீல்ஸ்சே குலுங்கிடுச்சு..!

roja
பூஜா வா, பூஜா வா என்ற பாடல் வரிகளுக்கு பதிலாக ரோஜாவா.. ரோஜாவா.. என்று ரசிகர்கள் முனுமுனுக்க கூடிய வகையில் பெருவாரியான ரசிகர்களை 1990 சமயங்களில் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் நடிகை ரோஜா. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளில் பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்தவர்.
தமிழைப் பொறுத்தவரை இவர் உச்சகட்ட நட்சத்திரங்களாக இருந்த ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இவர் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழுக்கு அறிமுகமானார். தமிழில் இவர் சரத்குமார் உடன் இணைந்து நடித்த சூரியன் திரைப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு தந்தது.

roja
இந்தப் படத்தை இயக்கிய ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. சுமார் எழுவதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் சின்னத்திரை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமையை கொண்ட ரோஜா ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

roja
தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கி இருக்கக்கூடிய இவர் ஆந்திராவில் சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்து வரும் ரோஜா இன்னும் தான் நடிகை என்பதை மறவாமல் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளை செய்து வருவார் அந்த வகையில் அண்மையில் இவர் வெளியிட்ட ரீலிஸ்சில் தெலுங்கு பாட்டுக்கு செம தியாக ஆட்டம் போட்டு இருக்கிறார் எந்த ஆட்டம் தான் தற்போது அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது.
இதை அடுத்து இவரது ரசிகர்கள் ரிலீஸ் குலுங்கி விட்டது என்று பேசிக் கொள்கிறார்கள் மீண்டும் திரையில் நடிக்க வந்தாலும் அவர்கள் இவருக்கு கட்டாயம் ஆதரவளிப்பார்கள்.