Vijay: ஈஸியா சேர்ல போய் உட்கார்ந்திட முடியாது.. விஜய் பாலிட்டிக்ஸ் குறித்து ரோஜா ப்ளாஸ்ட்

by Rohini |   ( Updated:2025-04-12 00:52:44  )
roja (1)
X

roja (1)

Vijay: சமீபகாலமாக நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்துவருவதை நாம் பார்த்து வருகிறோம். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த ரோஜாவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளை அவர் முன் வைத்து வருகின்றனர். அதற்கு மிகவும் பொறுமையாக ரோஜா பேட்டிகள் மூலம் பதில் கொடுத்து வருகிறார். அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து இப்போது அரசியல் வரை எல்லா அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயின் அரசியல் குறித்தும் ரோஜாவிடம் கேட்கப்பட்டது. விஜயுடன் சேர்ந்து தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா என்ற ஒரே ஒரு பாடலில்தான் சேர்ந்து ஆடியிருக்கிறார் ரோஜா. இன்று டாப் டையரில் இருக்கும் நடிகர் விஜய். சம்பளத்திலும் அவர்தான் டாப். அப்படி இருக்கும் போது எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட்டு அரசியலுக்கு வருகிறார் என்றால் ஏதாவது ஒரு சூழ்நிலை அவர் இந்த முடிவை எடுப்பதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

ஆனால் எடுத்தவுடனேயே அந்த சேரில் போய் உட்கார்ந்து விட முடியாது. கூட்டத்திற்கு நடுவில் வந்து நிற்க வேண்டும். அப்போது மக்களின் ரியல் ஃபீலிங்ஸ், ரியல் எமோஷன்ஸ் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். அதுதான் பிறகு அவருக்கான வோட்டாக மாறும். அதனால் அவர் இன்னும் ஹோம் வொர்க் பண்ணனும், கடுமையான உழைப்பை போடணும்.

அதுமட்டுமில்லாமல் ஒரு மீட்டிங் வைத்தார். அப்படியே ஜெகன் சார் வைத்த மீட்டிங் மாதிரியே இருந்தது. ஆனால் ஜெகன் அப்போது முதல்வராக இருந்தார். அதனால் மாவட்ட அளவில் நடந்த அந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்வதற்கு ஏகப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும். எஸ்பியில் இருந்து கலெக்டர் வரை அத்தனை பேரோடு உழைப்பு இருக்கணும். ஆனால் விஜய் ஏற்பாடு செய்திருந்த அந்த மீட்டிங்கில் அதுவும் எம்.எல்.ஏக்கள்னு யாருமே கிடையாது. எல்லாமே புதுசு. ஆனால் அந்த கூட்டத்தை அதகள படுத்திட்டாரு விஜய்.

அதுதான் இப்போது வரை எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. யார் அவருக்கு வழி நடத்துகிறார் என்று தெரியவில்லை. ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்றவர்களை அவர் இன்ஸ்பிரேஷனாக வைத்து அதற்கு தகுந்த மாதிரி கூட்டத்தில் இறங்கி சுற்றினால் கண்டிப்பாக மக்கள் அவரை ஆசிர்வதிப்பார்கள் என்று ரோஜா அந்த பேட்டியில் கூறினார்.

Next Story