Lokesh Kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ரோலக்ஸ் படத்தில் இதை செய்யக்கூடாது என்பதை முக்கிய முடிவாக எடுத்து இருக்கிறாராம். அதை கேட்ட ரசிகர்கள் அதுவும் நல்லது தான் எனக் கமெண்ட் அடிக்க தொடங்கிவிட்டனர்.
லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் கைதி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அப்படத்தினை தொடர்ந்து கமலை வைத்து விக்ரம் படத்தினை இயக்கினார். அப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. முக்கியமாக படத்தில் கைதி படத்தின் காட்சிகள் இணைக்கப்பட்டது ரசிகர்களிடம் லைக்ஸை குவித்தது.
அதற்கு லோகேஷ் எல்சியூ எனப் பெயர் வைத்தார். இதனை தொடர்ந்து கனெக்ஷன் இருக்கும் படங்களில் எல்சியூ என்பதை இணைப்பேன் எனவும் கூறி இருந்தார். அதன்படி விஜயின் லியோ திரைப்படம் எல்சியூ கணக்கில் வந்தது. ஆனால் மாஸ்டர் திரைப்படம் தனிப்படமாகவே வந்தது.
அந்த வகையில், லோகேஷ் இயக்கத்தில் எல்சியூ கணக்கில் விக்ரம் இரண்டாம் பாகம் மட்டுமே கடைசி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் 100 கோடியாக இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்தியன்2 மற்றும் தக் லைஃபை முடித்துவிட்டு கமல் லோகேஷின் படத்தில் இணைவார் என்கின்றனர்.
இதனால் ரோலக்ஸ் திரைப்படம் தனிப்படமாகவே அமையும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புடன் ரிலீஸான லியோ பலரிடத்திலும் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இதனால் தான் ரோலக்ஸ் மீது இருக்கும் எதிர்பார்ப்பை கெடுக்க கூடாது என்பதற்காக தனிப்படமாக எடுக்க லோகேஷ் முடிவெடுத்து இருக்கிறாராம்.
நடிகர் சல்மான்…
Ajithkumar: நடிகர்…
சென்னை வானகரத்தில்…
Biggboss Tamil:…
Biggboss Tamil: …