கமல் பிறந்தநாள் விழாவில் ரோலக்ஸ்!.. எல்சியூவில் அடுத்து அந்த பாலிவுட் நடிகரும் இணைய வாய்ப்பிருக்கா?..
உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான், நடிகர் சூர்யா, நடிகை குஷ்பூ, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிட்டத்தட்ட 65 வருடங்கள் தமிழ் சினிமாவில் நாயகனாக வளம் வரும் கமல்ஹாசன் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ‘தக்’ வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வரலாறு இதுதான்!.. அட உலக நாயகன் சும்மா வைக்கல பேர!.
வித்தியாசமாக தக் லைஃப் எனும் தலைப்புடன் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. அந்த படத்தில் துல்கர் சல்மான், திரிஷா மற்றும் ஜெயம் ரவி நடிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கமல் பிறந்தநாள் விழாவில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் ஆக நடித்து அனைவரையும் மிரள வைத்து எல்சியூவுக்கே பெரிய அங்கீகாரம் கொடுத்த சூர்யா கலந்து கொண்டது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளது.
இதையும் படிங்க: அடுத்த டைவர்ஸ் ரெடி..! பாக்கியா போல கிளம்பிய ஜெனி..! அடுத்து யாரு அமிர்தாவா..?
மேலும், தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படத்தின் நாயகன் பாலிவுட் நடிகர் அமீர் கானும் நேற்று நடைபெற்ற கமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டது தான் தமிழ் திரையுலக பிரபலங்களுக்கே பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
தனது அம்மாவின் உடல்நலத்தை குணப்படுத்துவதற்காக சென்னையில் குடிகொண்டிருக்கும் அமீர் கான் கமல் பிறந்தநாளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஓடோடி வந்து பார்த்துள்ளார். அப்படியே எல்சியூவிலும் அமீர் கான் கமீட்டாகி கம்பேக் கொடுத்தால் வேறலெவல் வெறித்தனமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி உள்ளனர்.