
Entertainment News
செல்லம் நீயா இப்படி?!… அல்ட்ரா மாடர்ன் லுக்கில் கண்ணம்மா…தீயாய் பரவும் புகைப்படங்கள்….
கேரளாவை சேர்ந்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். சில குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னரே விஜய் டிவியில் டிஆர்பியில் மெஹா ஹிட் அடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோஷினி சின்னத்திரை ரசிகர்கள் மனதில் கண்ணம்மாவாகவே வாழ்ந்தார். ஆனால், எதிர்பாராத வகையில் இந்த சீரியலிலிருந்து அவர் விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
சினிமா வாய்ப்பு தேடி வரும் என்பதற்காக அவர் அந்த சீரியலில் இருந்து விலகியதாக தெரிகிறது. ஆனால், அவர் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. எனவே, குக் வித் கோமாளி போன்ற விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பெரும்பாலும் புடவையில் போஸ் கொடுக்கும் ரோஷினி, திடீரென அல்ட்ரா மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.