சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார்...! புதிய டிரென்டில் தாறுமாறா வீடியோ போட்டு கலக்கும் ரோஷினி...
கண்ணம்மா என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களின் மனதில் ஆழமான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் ரோஷினி ஹரிப்பிரியன். சீரியலின் மூலம் பிரபலமான கண்ணம்மா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
நடிகைகளை விட சீரியல் நடிகர்கள் இல்லத்தரசிகளிடம் எளிதில் பிரபலமடைகின்றனர். அதிலும், சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு அன்பு செலுத்துவார்கள். அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் ரோஷ்னி ஹரிப்பிரியன்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரைக்கு வாய்ப்புகாக சென்ற இவர் மறுபடியும் சின்னத்திரைக்கே வந்து சேர்ந்துள்ளார். குக் வித் கோமாளியில் போட்டியாளராக களம் இறங்கி ரசிகர்களின் அபிமான போட்டியாளராக மாறியுள்ளார்.
இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரோஷினி தற்போது சற்றும் வித்தியாசமாக புதிய டிரென்டில் பக்கா மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து நிற்கின்றனர்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CetN4zKJE0f/?utm_source=ig_web_copy_link