ஹார்ட்டின் விட ரெடியா இருங்க!...அல்ட்ரா மாடர்ன் உடையில் கண்ணம்மா நடிகை..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்பிரியன். பலரும் இந்த சீரியலை பார்த்ததற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருந்த ரோஷினி ஹரிப்பிரியன்தான்.
அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தமாக இவரின் முகமும் நடிப்பும் இருந்தது. எனவே, இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
‘உங்க திறமைக்கு நீங்க சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாவீங்க’ என யாரோ சொன்னதை கேட்டு சீரியலிலிருந்து விலகினார். ஆனால், அப்படி எதுவும் நடிக்கவில்லை.
எந்த இயக்குனரும் நடிக்க அழைக்கவில்லை. எனவே, விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாடர்ன் உடையில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.