நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனா சண்டை தான் நடக்கும்!.. சூரி ஹீரோயின் உருட்டிய செம உருட்டு!..
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். சூட்கேசை தூக்கிக்கொண்டு கணவர் பாரதியை பிறந்துவிட்டு கண்ணம்மா நடக்க ஆரம்பித்த காட்சிகள் இதுவரை எந்த சீரியலும் வைரல் ஆகாத அளவுக்கு ஏகப்பட்ட மீம்களுடன் சமூக வலைதளத்தை ஒரு புரட்டு புரட்டியது.
பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் உச்சத்தில் இருந்த நிலையில் திடீரென இனி கண்ணம்மா மாவாக நான் நடிக்க மாட்டேன் என அந்த சீரியலை விட்டு விலகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ரோஷினி ஹரிப்ரியன்.
இதையும் படிங்க: எப்பா ஒரு முடிவுக்கு வாங்கப்பா!.. ரசிகர்களை குழப்பும் விடாமுயற்சி டீம்!.. பின்னணியில் இருப்பது யார்?…
பாரதி கண்ணம்மா சீரியல் இருந்து விலகிய நிலையில் சினிமாவுக்கு செல்ல போகிறார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு திடீரென குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து சினிமா படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்த ரோஷினி ஹரிப்ரியனுக்கு சூரி ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தில் சசிகுமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சூரிக்கு ரோஷினி ஹரிப்ரியன் ஜோடியா அல்லது சசிகுமாருக்கு ஜோடியா என்பதில் சிறு குழப்பம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: பட்ஜெட்டோ பல கோடி!.. பக்கா ஸ்கெட்ச்!. பேன் இண்டியா போஸ்டர்!.. கல்லா கட்டுமா லியோ!..
இந்நிலையில், சமீபத்தில் கருண் ராமனுடன் பேட்டி ஒன்றில் பேசிய ரோஷினி ஹரிப்ரியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகப் போறீங்களா என்கிற கேள்விக்கு... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரும் நண்பர்களாக இருப்போம்.
ஆனால், அதே பிக்பாஸ் வீட்டுக்கு சென்றால் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலைதான் உருவாகிறது. சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ள நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போகல பாஸ் என ஒரே கும்பிடாக போட்டுவிட்டார்.