சினிமாவை நம்பி மோசம் போன கண்ணம்மா.. இருக்குற வாய்ப்பும் போச்சே!....

by சிவா |
roshini
X

விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பியை பெற்றுள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. அதனால்தான் பல வருடங்களாய் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு காரணம் இந்த சீரியலில் கண்ணம்மாவா நடித்த ரோஷினி ஹரிப்பிரியாதான். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவாகியது.

bharathi

ஆனால், தனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் சென்ற மாதம் ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார், இந்த செய்தியை கேட்ட பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைப்போல ரோஷினி க்கு பதிலாக ரோஷினி போலவே இருக்கும்‌ வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரோஷினி விலகி, வினுஷா தேவி உள்ளே வந்தவுடன், டாப் 5 வரிசையில் இருந்து டாப்10 வரிசைக்கு தள்ளப்பட்டது, இப்பொழுது டாப் 10 வரிசையில் 7 இடத்தை பெற்றுள்ளது.

roshini

இந்த சீரியலில் நடித்து பிரபலமாக துவங்கிய உடனேயே ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது. சில இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படங்களில் கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால், விஜய் டிவியின் செய்து கொண்ட ஒப்பந்த காலம் முடிவடையாததால் அந்த வாய்ப்புகளை இழந்தார் ரோஷினி. எனவே, தற்போது ஒப்பந்த காலம் முடிந்தவுடன் இந்த சீரியலுக்கு குட் பை கூறினார்.

bharathi kanama

bharathi kanama

தற்போது வாய்ப்பு தருகிறேன் எனக்கூறிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அவர் அணுகினால் அவர்கள் கூறிய பதில் அவருக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது. அதாவது, ‘சீரியலில் நீ இளம்பெண்ணாக நடித்து வந்தாய். ஆனால், அதன்பின் கதைப்படி 2 பெண் குழந்தைகளுக்கு நீ அம்மாவாக மாறிவிட்டாய். ரசிகர்களின் மனதிலும் உன் இமேஜ் அப்படித்தான் மாறியிருக்கும். இப்படி இருக்கும்போது உன்னை எப்படி கதாநாயகியாக நடிக்க வைக்க முடியும்?... வேண்டுமானால், கதாநாயகியின் அக்கா போன்ற வேடங்களில் நடிக்க வைக்கிறோம்’ எனக்கூற அதிர்ந்து போயுள்ளாராம் கண்ணம்மா..

roshini

என்னடா இது? இப்படி நாம் யோசிக்கவே இல்லையே!.. இப்போது இருக்குற சீரியல் வாய்ப்பும் போச்சே.. என்ன செய்வது? என புலம்பி வருகிறாராம் ரோஷினி ஹரிப்பிரியன்.

சினிமாவில் இருந்து சீரியலுக்கு பலரும் சென்றுள்ளனர். ஆனால், சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று பெரிதாக புகழடைந்தவர்கள் யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story