இவ்ளோ ஓபனா யாரும் சொல்லிருக்கமுடியாது...! போட்டுடைத்த நம்ம ரோஷினி..வாயடைச்சுப் போன ரசிகர்கள்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலயே மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சீரியல் பாரதி கண்ணம்மா. அதனால்தான் பல வருடங்களாய் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் கண்ணம்மா பாத்திரத்தில் நடித்த ரோஷினி தான். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பெற்று இருந்தார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி அறிவித்தார், இந்த செய்தியை கேட்ட பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது, ரோஷினிக்கு பதிலாக வினுஷா தேவி என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், ரோஷினி அளவுக்கு அவர் ரசிகர்களை கவரவில்லை.
ரோஷினிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. அதனால் தான் பெரிய திரைக்கு இவரை அழைத்துக் கொண்டுபோனது. இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது சமையல் திறனை காட்டி வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் தனது ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை ரசிகர்களுக்காக ஸேர் செய்தும் வருகிறார். இந்த நிலையில் ஒரு ரீல்ஸ் வீடியோவில் தன் காதலை சொல்லும் விதமாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் யாருக்காக சொல்லியிருப்பார் என்று குழப்பத்தில் உள்ளனர்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CaROulkpVKW/?utm_source=ig_web_copy_link