இப்படி காட்டினா பாத்துக்கிடே இருப்போம்!.. கண்ணம்மா ரோஷ்னியின் நச் கிளிக்ஸ்...
சென்னையை சேர்ந்தவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். இவர் பிறந்து வளர்ந்தது, கல்லூரில் படித்தது எல்லாமே சென்னையில்தான். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
சினிமாவில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சினிமாவில் வாய்ப்பு இல்லையெனில் பலரும் செல்வது விஜய் டிவிக்குதான்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த சிரீயலில் கணவரால் கைவிடப்பட்டவராக, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக, சுயமாக தனது வாழ்வை வாழும் பெண்ணாக அசத்தியிருந்தார்.
சில வருடங்கள் கண்ணம்மா வேடத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். ஆனால், திடீரென அந்த சீரியலிலிருந்து விலகினார்.
சினிமாவில் நடிக்க முடிவெடுத்ததால் அவர் சீரியலிலிருந்து விலகியதாக தெரிகிறது. ஆனால், இப்போது வரைக்கும் இவரின் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
இடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில ஆல்பம் வீடியோ மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், தன்னுடைய புகைப்படங்களை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து ரோஷ்னி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.