மஞ்சள் காட்டு மைனா.... க்ளோப்சல காட்டி கிக் ஏத்தும் கண்ணம்மா!
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தனது கெரியரை தொடங்கியவா் ரோஷினி ஹரிப்பிரியன். அதன் மூலம் ரசிகா்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை உருவாக்கினார். அந்த தொடரில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து வாயிலாக சிறப்பான அந்தஸ்து அவருக்கு கிடைத்தது. போன வருடம் விஜய் அவா்ட்ஸ் நிகழ்ச்சியில் அந்த சீரியலுக்கான பரிசை வென்றார்.
விஜய் டிவி. பெரிதாக டிஆர்பி இல்லாமல் இருந்த சீரியலை, தனது நடையால் டாப் கியருக்கு கொண்டு சென்றது ரோஷினி தான். இதனால், சீரியலுக்கு பல மீம்கள் வரிசை கட்டியது போல புகழும் கிடைத்தது.
சீரியலில் நடித்ததன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவர் வீட்டு கதவை தட்டியது. இதனால் அந்த சீரியலிருந்து விலகினாா்.ஆனால் எதிர்பார்த்த மாதிரி அவருக்கு சினிமா வாய்ப்பு கிட்டவில்லை. அவருக்கு கிடைத்த வாய்ப்பு என்னவோ கிளாமர் ரோலில் நடிக்கும் படியாக அமைந்தது. அந்த காரணத்தினால் அந்த வாய்ப்பை ஏற்று கொள்ளவில்லை ரோஷினி.
பின் தற்போது விஜய் தொலைக்காட்சியின் பேவரைட் நிகழ்ச்சியான குக்வித் கோமாளியில் கலந்து கொண்டு வருகிறார். அதிலும் தனது க்யூட்டான சிரிப்பாலும், பேச்சு திறமையாலும் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தளங்களையும் ஆக்டிவ்வாகவே வைத்திருப்பார். விதவிதமான போட்டோஷூட்கள் செய்து ரசிகர்களை கவர்வதில் அம்மணி கில்லாடி.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் மஞ்சள் நிறத்தில் ஷா்ட் அணிந்து முகத்தை க்ளோசப்பில் காண்பித்து இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.