ஜி.பி.முத்து ஒரு சுயநலவாதி!.. சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிபேபி சூர்யா விளாசல்...
சில வருடங்களுக்கு முன் டிக்டாக் ஆப் மூலம் திடீரென பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவரின் உண்மையான பெயர் சுப்புலட்சுமி. துவக்கத்தில் மற்றவர்களை போல டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது என செய்து வந்த இவர் ஒருகட்டத்தில் எப்படியாவது பிரபலமாக வேண்டுமென ஆபாசமாக உடைகளை அணிந்து நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.
அதன்பின் யுடியூப்பில் ஆபாசமாக ஒருவரை திட்டியதாக புகார் கொடுக்கப்பட்டு சிறைக்கு சென்றார். இவர் மீது குண்டாஸ் சட்டமும் போடப்பட்டு ஒருவருடம் சிறையில் இருந்த ரவுடிபேபி சூர்யா சமீபத்தில் பிணையில் வெளியே வந்தார். மேலும், நடிகை ஷகிலா இவரிடம் எடுத்தார். அதில், ஷகிலா கேட்ட பல கேள்விகளுக்கு ரவுடிபேபி சூர்யா பதிலளித்தார்.
அப்போது தனது கணவர் சரியில்லை அதனால்தான் பாலியல் தொழிலுக்கு சென்றேன் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை ரவுடிபேபி பகிர்ந்து கொண்டார். இவரும், ஜிபி முத்துவும் இணைந்து டிக்டாக்கில் பல வீடியோக்களை வெளியிட்டனர். அதன்பின் இருவரும் ஒருவரை தாக்கி பேசி தனித்தனி வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்ப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், ஜிபி முத்துவை பற்றி என்னை நினைக்கிறீர்கள் என ஷகிலா கேட்டதற்கு ரவுடி பேபி சூர்யா ‘அவர் மிகவும் பொறுமையானவர்தான். ஆனால், என் விஷயத்தில் சுயநலவாதி. நான் சிறையில் இருந்தபோது என் குழந்தைகளை சென்று பார்த்திருக்கலாம். அவர்களுக்கு எதாவது உதவியிருக்கலாம். ஆனால், அவர் அதை செய்யவில்லை. அவரை எப்படியாது பீட் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். கண்டிப்பாக அவரை தாண்டி பிரபலமாவேன்’ என சவால் விட்டார் ரவுடிபேபி சூர்யா.
இதையும் படிங்க: ஒருத்தர்னு சொல்லிட்டு பத்து பேரு!.. ரவுடி பேபி சூர்யா கன்ணீர் பேட்டி…