இவங்களுக்கு ஒன்னும் தெரியாது… ஹிட் பட இயக்குனரை குறை சொன்ன விஜயகாந்த்… கண்டபடி திட்டிய ராவுத்தர்...

by Arun Prasad |   ( Updated:2023-04-07 11:49:34  )
Vijayakanth
X

Vijayakanth

சிறு வயதில் இருந்தே விஜயகாந்த்தின் உற்ற நண்பராக திகழ்ந்து வந்தவர் ராவுத்தர். இருவரும் ஒரே சமயத்தில்தான் சினிமாவிற்குள் நுழைந்தனர். ராவுத்தர் கதை எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். விஜயகாந்த் பின்னாளில் நடிகரான பிறகு விஜயகாந்த்திற்காக பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். ராவுத்தர் என்ன சொன்னாலும் அதனை விஜயகாந்த் கடைப்பிடிப்பார். அந்த அளவுக்கு இருவருக்குமான புரிதல் இருந்தது. இந்த நிலையில் ராவுத்தருக்கும் விஜயகாந்த்துக்கும் இருந்த நெருக்கமான நட்பிற்கு உதாரணமான ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

விஜயகாந்துக்கு பிடிக்காத இயக்குனர்

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் “புலன் விசாரணை”. இத்திரைப்படத்தின் கதையை இப்ராஹீம் ராவுத்தர் எழுதியிருந்தார். இந்த கதையை படமாக்க பல இயக்குனர்களை தேடிக்கொண்டிருந்தார் ராவுத்தர். அப்போதுதான் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை சந்தித்திருக்கிறார் ராவுத்தர். ஆர்.கே.செல்வமணியை பிடித்துப்போக அவரையே இயக்குனராக ஒப்பந்தம் செய்யலாம் என ராவுத்தர் முடிவு செய்தார். ஆனால் விஜயகாந்த்துக்கு ஆர்.கே.செல்வமணியை பிடிக்கவில்லையாம்.

ஆர்.கே.செல்வமணி பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர், இவர்களுக்கு கதை சொல்லக்கூட தெரியாது, வெளிநாட்டுப் படங்களை அப்படியே காப்பி செய்து எடுப்பார்கள் என விஜயகாந்த் குறை கூறியிருக்கிறார். எனினும் ராவுத்தர் சொன்னதால் விஜயகாந்த் ஒப்புக்கொண்டார்.

கண்டபடி திட்டிய ராவுத்தர்

விஜயகாந்த், படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்புத் தரவில்லையாம். ஆர்.கே.செல்வமணிக்கும் விஜயகாந்த்துக்கும் கருத்து வேறுபாடுகள் வந்துகொண்டிருந்ததாம். அப்போது ராவுத்தர் விஜயகாந்த்திடம், “என்ன நினைச்சிக்கிட்டு இருக்க நீ? என் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க மாட்டியா?” என கேட்டிருக்கிறார். அதற்கு விஜயகாந்த் அமைதியாக இருந்திருக்கிறார்.

“இந்த படம் தோல்வி அடைந்துவிட்டால் நான் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன்” என கோபமாக கூறினாராம் ராவுத்தர். அதன் பின் விஜயகாந்த் தனது தவறை உணர்ந்து அத்திரைப்படத்தில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்தாராம்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளத்தை குறைத்த தனுஷ்?… ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!

Next Story