5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய ராஜமவுலி படம்!.. குவியும் பாராட்டுக்கள்!...
தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜமவுலி. தமிழகத்தில் ஷங்கரை போல தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வருபவர். இவர் இயக்கும் ஒவ்வொரு படங்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகிறது. சிரஞ்சீவி மகன் ராம் சரண் அறிமுகமான் மஹதீரா படத்தை இவரே இயக்கியிருந்தார்.
அதன்பின் ‘ஈ’ படத்தில் ஒரு ஈ பழிவாங்குவது போல திரைக்கதை அமைத்து அதகளப்படுத்தியிருந்தார். அதேபோல் அவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் பெரிய அளவில் ரீச் ஆனது. இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. இரண்டு படங்களுமே வசூலை வாரி குவித்தது.
இதையும் படிங்க: 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!.. சிறந்த பட விருதை தட்டி சென்ற விஜய் சேதுபதி படம்..
அந்த இரண்டு படங்களுக்கும் அடுத்து ராஜமவுலி இயக்கிய படம்தான் ஆர்.ஆர்.ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படமும் நல்ல வசூலை பெற்றது. இந்நிலையில்தான் 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பின்னணி இசை கீரவாணி.. சிறந்த பாடகர் காலபைரவா.. மக்களிடம் வரவேற்பை பெற்ற படம்.. சிறந்த சண்டை காட்சி கிங் சாலமன், சிறந்த நடன இயக்குனர் ரக்ஷித் என மொத்தம் 5 விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே சிறந்த பாடலுக்கான 2 ஆஸ்கர் விருதுகளை இப்படம் பெற்றிருந்தது.
ஆர்.ஆர்.ஆர். படத்திற்க்கு 5 தேசிய விருது அறிவிக்கப்பட்டிருப்பது அப்படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் பலரும் இப்படக்குழுவினருக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பட ரிலீஸுக்கு முன்பே டபுள் ஆஃபர் கொடுத்த தயாரிப்பாளர்! ‘கேப்டன் மில்லர்’ படத்தால் இயக்குனருக்கு அடிச்ச பம்பர்